டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுசீரமைப்புத் தொடர் பான இறுதி அறிக்கையை அம்மாநில எதிர்க்கட்சிகள் நிராகரிப்பு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
அம்பேத்கர் சட்ட பல்கலைகழக துணை வேந்தரை, மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவை சட்டசபையில் அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளார்.
என்.எல்.சி. நிறுவன பணிகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்.
மகாராட்டிரா உள்ளாட்சி தேர்தல், இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு இல்லாமல் நடத்த முடியாது, அரசு திட்டவட்டம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
'இந்து ராஷ்டிரா' தீர்மானம் நிறைவேற்றிடும் நிகழ்ச் சிக்கு எதிரான புதிய மனுவை மே 9ஆம் தேதி உச்சநீதி மன்றம் விசாரிக்கும்.
தி ஹிந்து:
தமிழ் நாடு அரசின் ஓராண்டு ஆட்சியில், முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் முதிர்ச்சியுடன் சவால்களை கையாண் டார் என்கின்றனர் திமுக கூட்டணியினர்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
கோவையில் நடைபெற்ற தேசிய தென்னை நார் மாநாட்டின் துவக்கத்தில் கணபதி மந்திரம் ஒலிக்கப்பட் டதால் சலசலப்பு. மாநில அமைச்சர் அன்பரசன் தலை யீட்டில் தமிழ்மொழி தாய் வாழ்த்து பாடப்பட்டது.
கோயில்களில் தமிழில் பூஜை செய்தால், அர்ச்சர்கர் களுக்கு 60 சதவீதம் கமிஷன் என இந்து அற நிலையத் துறை அறிவிப்பு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment