சென்னை, மே 3 -மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேட்டூரில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உள்ள 4 யூனிட் கொண்ட பழைய அனல் மின் நிலைய மும், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், புதிய அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதனால் கொதிகலன் குழாய் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதன் காரணமாக புதிய அனல்மின் நிலையத்தில் நடைபெற்று வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி முழுமையாக தடைப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment