கழக களத்தில்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 5, 2022

கழக களத்தில்....

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் வெ.முருகதாஸ் ,மாநில செயலாளர் கா.பெரியசாமி, மாநில அமைப்பு செயலாளர் சு.இளவரசன்,மாநில இணை பிரச்சார செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்களைச் சந்தித்து  தங்களின் கோரிக்கை மனுவை அளித்தனர். (பெரியார் திடல், 27-04-2022).

கால்நடை மருத்துவர்கள் அய்யப்பன்,  பாலசுப்பிரமணியன்,  சின்ன மருதுபாண்டி,  செல்வேந்திரன், நாகூர் மீரான் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்களைச் சந்தித்து தங்களின் கோரிக்கை மனுவை அளித்தனர்.(பெரியார் திடல், 

27-04-2022).

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் மாநில பொருளாளர் ப.ருக்மாங்கதன்,செயராமன்,வேதநயகம்,தங்க இராசேந்திரன் ஆகியோர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்களைச் சந்தித்து மறைந்த தலைமையாசிரியர்  தே. தயாளன் அவர்களின் நினைவேந்தல் அழைப்பிதழை  வழங்கினர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தமிழர் தலைவரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவினை அளித்தனர்.  (சென்னை. 27.4.2022)


No comments:

Post a Comment