திண்டிவனம், மே 30 திண்டி வனம், ஒலக்கூரில் உள்ள சிவன் கோவிலில் திருடு போன சிலை களை கண்டு பிடித்து தரக்கோரி, ஓய்வு பெற்ற காவல்துறை இயக் குநர் பொன் மாணிக்கவேல், காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் சிறப்பு உதவி ஆய்வாளர் ஞான பிரகாசத்திடம், ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் பொன் மாணிக்கவேல், ஒலக்கூர் அகத்தீஸ்வரர் கோவிலில் திருடு போன சிலைகளை கண்டு பிடித்து தரக் கோரி புகார் மனு அளித்தார் .பின்னர் அவர் அளித்த பேட்டி: ஒலக்கூரில் உள்ள சிவன் கோவில், 960 ஆண்டுகளுக்கு முன் இரண் டாம் ராஜேந்திர தேவர் என்ற சோழ தமிழ் வேந்தனால் கற்கோ விலாக கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு கொடையாளி மூலம் விக்னேஷ்வர் சிலை கொடுக்கப் பட்டுள்ளது. கோவில் கருவறை வெளியே, அய்ந்து 'திருமேனி கல் தெய்வங்கள்' மக்கள் வழிபாட்டில் இருந்து வந்துள்ளன.
இவை அனைத்தையும் பாது காக்க வேண்டி, அறநிலையத் துறையினரால் அகற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுநாள் வரை கொண்டு செல்லப்பட்ட கல் சிற் பங்கள், மீண்டும் கோவிலுக்கு வர வில்லை.பழமை வாய்ந்த இந்த கோவி லில் பூஜை எதுவும் நடக்கவில்லை. கோவிலை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக அறநிலையத் துறையினர் முற் றிலும் புறக்கணித்து விட்டனர். கோவிலில் இருந்த பல சிலைகள், வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டு உள்ள தாக தெரிகிறது. சிலை கடத்தல் தொடர்பாக அற நிலையத் துறையி னரோ, பொது மக்கள் தரப்பிலிருந்தோ ஒலக் கூர் காவல்துறையில் இதுவரை புகார் கொடுக்கவில்லை.
இந்த சிலை திருட்டில் ஈடுபட்டவர்கள் பலர் இறந்திருக் கலாம். சிலர் வெளிநாட்டிலும், உள்ளூரிலும் இருக்கலாம். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக் கும் பொருட்டு, ஒலக்கூர் காவல்துறையில் புகார் கொடுக் கப்பட்டுள்ளது. புகார்மீது காவ லர்கள் நடவடிக்கை எடுப்பர் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment