மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்கும் இடத்தை அறிய புதிய செயலி அமைச்சர் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 5, 2022

மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்கும் இடத்தை அறிய புதிய செயலி அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை, மே 5 -கைப்பேசி மூலமாக சென்னையில் பேருந்துகளின் வழித் தடத்தை அறியும் புதிய செயலியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத் தார். 

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, நுண்ண றிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் மேம்படுத்தப்பட்ட நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்கும் இடத்தை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் சென்னை பேருந்துஎன்ற செயலி தொடங்கப்பட்டது. இந்த செயலியை, சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று (4.5.2022) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போக்கு வரத்துத் துறை முதன்மைச் செயலாளர் கோபால், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிரகாம் ஆகியோர் கலந்து கொண் டனர்.

இந்த செயலியானது, அனைத்து சென்னை மாநகர பேருந்துகளிலும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பயன்படும்படி பேருந்து களின் வருகை நேரம், வந்து கொண்டிருக்கும் இடம் ஆகியவற்றை கைப்பேசியில் தெரி யும்படி, தானியங்கி வாகன இருப்பிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜி.பி.எஸ். கருவி

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தமாக உள்ள 3,454 பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள அண்டை மாவட் டங்களுக்கு 602 வழித்தடங்களில் 6,026 பேருந்து நிறுத்தங்களில் நின்றும் செல்லும் வகையில் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை மாநகர் போக்குவரத்து கழகக் பேருந்துகளில் தினந்தோறும் பயணம் செய்யக்கூடிய ஏறத்தாழ 25 லட்சம் பயணிகள் உள்பட பிற மாவட் டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வருகை தரும் பயணிகளும் இச்செயலியை பயன்படுத்திக் கொள்ள லாம். 

இந்த செயலியை பயன்படுத்தி பேருந்துகளில் உரிய நேரத்தில் பயணம் செய்து, சென்னை புறநகர் ரயில் நிலையம், சென்னை மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தங்கள் பயணத்தை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் சென்னை நகரத்துக்கு புதிதாக வருகை தரும் மக்கள், தங்கள் இருப்பிடத்தின் அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம், அந்த நிறுத்தத்துக்கு வந்து கொண்டிருக்கும் பேருந்துகளின் விவரம் ஆகியவற்றை உடனடியாக அறிந்து கொள்ளலாம். மேலும், தங்களது பயண திட்டத்தை முன்கூட்டியே வகுத்துக்கொள்ள ஏது வாக இந்த செயலி அமைக்கப்பட்டுள் ளது. பயணிகள் அவசர மற்றும் பாதுகாப்பு செய்தியை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உடனே தெரிவித்திட, இச்செயலியில் உள்ள எஸ். ஓ.எஸ். என்ற பொத்தானை பயன் படுத்திக்கொள்ளலாம்.

1 கி.மீ. தூரத்துக்குள்...

கைப்பேசியில் கூகுள் பிளே ஸ்டோ ருக்கு சென்று சென்னை பேருந்து செயலியை டவுன்லோடு செய்யலாம். கைப்பேசியில் தங்களது இருப் பிடத்தை (லொகேஷன்) குறித்தல் செய்ய வேண்டும். பின்னர் டவுன் லோடு செய்த அந்த செயலிக்கு சென்றால் தங்களது இருப்பிடம் மற்றும் சுமார் 1 கி.மீ. தூரத் துக்குள் இருக்கும் பேருந்து நிறுத்தங்கள் அடங்கிய வரைபடம் தெரியும்.

எந்த பேருந்து நிறுத்தத்துக்கு செல்ல வேண்டுமோ அதனை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து அந்த பேருந்து நிறுத்தத்துக்கு வரக்கூடிய அனைத்து பேருந்துகளும், வரிசைப்படி, தட எண், பேருந்து பதிவு எண் மற்றும் கணிக்கப்பட்ட நேரம் (நிமிடங்களில்) உள்ளிட்ட விவரங்களை அறியலாம். செல்ல வேண்டிய தட எண்ணை தேர்வு செய்யும் போது, தாங்கள் நிற்கக்கூடிய பேருந்து நிறுத்தம் மற்றும் பேருந்து வரும் இடம் ஆகியவை வரைபடத்துடன் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment