ஒட்டன்சத்திரம்,மே5- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் அருகில் உள்ள சாமியார்புதூர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. விவசாயி. இவரது மகன் கிருஷ்ணகுமார் (வயது18). பள்ளி மாணவரான இவர் பகுதி நேரமாக அங் குள்ள மைக்செட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள நாகணம்பட்டியில் காளி யம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் 3.5.2022 அன்று அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணியில் கிருஷ்ணகுமார் ஈடுபட்டு வந்தார்.
அப்போது உயர் அழுத்த மின் கம்பியில் அவரது கை பட்டதில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவரை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சாவூர் அருகே நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து கோவில் திருவிழாக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment