கட்டுக் கடங்காக் கடுமை கொடுமை
காவிக் கொடி ஆட்சி
மட்டுப் படாவகை மாதமிழ் நாட்டினை
மதிக்கா தேபுகுத்திப்
பட்டுப் போகும்வகை பத்தினியைத் தீண்டும்
பாதக ‘நீட்’ தேர்வை
உட்புகுத் தும்அதை ஓட்டிட ஒளிதரும்
உயிர்தமிழர் தலைவர்!
மாசில் மனத்தவர் மானமிகுத்தவர்
மாண்புத் தந்தைபெரியார்!
பேசிய கொள்கைவெல் பீடறம் வெற்றிசெய்
பேருழைப்புச் செம்மல்தம்
ஊசிமுனைத்தவம் உன்னதம் காணல்போல்
உரிமை மறுப்போர் இந்திய
பாசிபடரிந்த ஒன்றிய ஆட்சியை,ஆசான்
பயணத்தால் வெற்றிபெறும்
மக்களால் அமைஆட்சி மாநில உரிமைகள்
மதிக்காத ஒன்றியத்தார்!
மிக்கவே தேசிய வேடம் தரித்தோர்தாம்
வீம்புக்கே ஆளுநரால்
தக்கபடி நடித்திடும் நாடகம் நடத்துவர்!
தகாததிதே எனமுழங்கி!
எக்களித் தேதமிழ் நாடு உணர்த்திய
எழுச்சிப் பயணமென்னே!
தேசியக் கல்விக் கொள்கை யென்றேதமிழ்த்
தேசத்தைச் சீரழிப்பார்!
நேசிக்கும் நல்லுறவை நீக்கி நீட்டால்
நெடுகவே பொய்யுரைப்பர்
பூசிக்கும் தமிழர்தம் போற்றும் உரிமைக்குள்
புழுதிவாரி இறைப்பதை
ஆசிரியர் வீரமணிப் பெம்மான் பயணமே
அகற்றியே வாகைசூடும்!
தந்தை பெரியார் திடலிலே தமிழகத்
தவமுதன் மைமுதல்வர்
உந்துஎ ழுச்சிப் பயணமே வென்றநிலை
ஓங்குபா ராட்டுமீந்தார்!
இந்திய அரசுசெய் இடும்பைகள் வெல்வோமென
எழுச்சி அறைகூவ லொலி
விந்தைச் சூளுரைத்தார் விடிவை விளைவிக்கும்
வெல்வார் நம்முதன்மை முதல்வரே!
- பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
No comments:
Post a Comment