கோவை, மே 31 யுபிஎஸ்சி தேர்வில் கோவையை சேர்ந்த சுவாதி சிறீ அகில இந்திய அளவில் 42ஆவது இடத்தையும், தமிழ்நாடு அளவில் முதலிடத்தை யும் பிடித்துள்ளார். வேளாண்மை படித்த இவர், வேளாண்மை மற் றும் விவசாயிகளுக்கு முக் கியத்துவம் அளிப்பேன் என தெரிவித்துள்ளார்.
சிவில் சர்வீசஸ் தேர் வில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த கோவையை சேர்ந்த சுவாதி (25) கூறியதாவது: அப்பா தியாகராஜன். பங்கு சந்தையில் உள்ளார். அம்மா லட்சுமி. அஞ்சல் துறை அலுவலக உதவி யாளராக இருந்தவர். தங்கை இந்திரா வேளாண் பல்கலையில் பி.டெக் படித்து வருகிறார். தஞ்சை கல்லூரியில் பி.எஸ்.சி. வேளாண்மை படித் தேன். கல்லூரி இறுதி யாண்டின்போது பீல்டு விசிட் செய்தேன். அப் போது, கிராமத்தில் தங்கி அங்கு கள பணிகளை செய்து வந்தோம். அப் போது, விவசாயிகள் தங் கள் வாழ்வில் அனுபவிக் கும் பிரச்சினைகளை அருகில் இருந்து பார்க்க முடிந்தது. இதனால், அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண் ணம் எழுந்தது.
இதற்கு, அய்ஏஎஸ் படித்தால்தான் தீர்வு காண முடியும் என நினைத்தேன். இதனால், அய்ஏஎஸ் படிக்க வேண் டும் என்ற எண்ணம் வந் தது. இதையடுத்து, சென் னையில் உள்ள தனியார் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து படிக்க துவங்கி னேன். கடந்த 2019இல் முதல் முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். அப்போது எழுத்து தேர் வில் தோல்வி அடைந் தேன். இதையடுத்து, 2020இல் மீண்டும் தேர்வு எழுதினேன். இதில், அகில இந்திய அளவில் 126ஆவது ரேங்க் கிடைத் தது. இதனால், அய்.ஆர் .எஸ். பதவி கிடைத்தது.
அதன்படி, வருமான வரித்துறையில் கடந்த மார்ச் மாதம் இணைந் தேன். ஆனால், பயிற்சிக்கு செல்லவில்லை. விடு முறை எடுத்து அய்ஏஎஸ் தேர்வுக்காக தொடர்ந்து படித்து வந்தேன். தற் போது நடந்த தேர்வில் அகில இந்திய அளவில் 42ஆவது இடம் கிடைத் துள்ளது. தமிழ்நாடு அள வில் முதலிடம் பெற்றுள் ளதாக கூறுகின்றனர். எனது பணியில் வேளாண் மைக்குதான் அதிகளவில் முக்கியத்துவம் தருவேன். புதிய திட்டங்கள், தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment