மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருத உறுதிமொழியா? காத்திருப்போர் பட்டியலுக்கு டீன் மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 2, 2022

மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருத உறுதிமொழியா? காத்திருப்போர் பட்டியலுக்கு டீன் மாற்றம்

சென்னை,மே2- மதுரை அரசு மருத்துவக் கல்லூரி யில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கான உறுதிமொழி எடுக்கப் பட்டபோது சமஸ்கிருதத் தில் உறுதிமொழி எடுக் கப்பட்டதைத் தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் தலைவர் (டீன்) காத்திருப்போர் பட்டிய லுக்கு மாற்றப்பட்டார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை நேற்று (1.5.2022) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்து வக் கல்லூரிகளிலும் புதி தாக சேரும் மாணவர்கள் மற்றும் மருத்துவக் கல்வி முடித்து பயிற்சியில் சேரும் மாணவர்கள் ஹிப் போகிரேடிக் உறுதி மொழி  (Hippocratic Oath)  எடுத்துக் கொள்வர். அனைத்து மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ மனைகள் தொடங்கிய காலத்தில் இருந்து இது பின்பற்றப்படுகிறது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 30.4.2022 அன்று புதிய மாணவர்க ளுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஹிப் போகிரேடிக் உறுதிமொ ழிக்கு பதிலாக மகரிஷி சரக்சப்த் எனும் உறுதி மொழி மேற்கொள்ளப் பட்டது. இது வன்மை யாக கண்டிக்கத்தக்க செயலாகும்.

மதுரை அரசு மருத் துவக் கல்லூரி டீன் ஏ.ரத்தினவேல், பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டிய லில் வைக்கப்படுகிறார். தன்னிச்சையாக விதி முறையை மீறி ஹிப்போ கிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொ ழியை மாணவர்களிடம் எடுக்க வைத்ததற்கு துறை ரீதியாக விசாரணை நடத்த மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபா புவுக்கு மக்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டு உள்ளார்.

இனிவரும் காலங் களில் அனைத்து மருத் துவக் கல்லூரிகளிலும் எப்போதும் பின்பற்றப் படும் ஹிப்போகிரேடிக் உறுதிமொழியை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என மருத்துவக் கல்விஇயக்குநர் மூலம் அறிவுறுத்தப்படும்.  இவ் வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment