மதுரை, மே 31- பணியாளர்கள் உயிரிழக்கும் நிலைக்கு முடிவுகட்ட இயந்திரங்களை மட்டுமே பயன் படுத்தி கழிவுநீர், பாதாளச் சாக்கடை போன்றவைகளில் தூய்மைப் பணி செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மாநில சம்மேளன (சிஅய்டியு) கூட்டம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழி யர்கள் மாநில சம்மேளனம் (சிஅய்டியு) கூட்டத்தில், மதுரை மாநகராட்சியில் 389 தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந் தரம் செய்திட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி தூய்மைப் பணியை அவுட்சோர்சிங் விடும் உத்தரவை கைவிட்டு தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கு நர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே வித மான ஊதியம் வழங்க வேண்டும். பாதாளச் சாக்கடை மற்றும் தூய்மை பணியில் விஷவாயு தாக்கி பணியாள ர்கள் மரணம் அடையும் நிலைக்கு முடிவு கட்ட இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்தி கழிவுநீர் பாதாள சாக் கடை போன்றவைகளில் தூய்மைப் பணி செய்திட வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை தொட்டி இயக்குநர், தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் .ஜூன் 25 -30 வரை மேல்நிலை தொட்டி இயக்கு நர்கள் கோரிக்கை இயக்கம் நடத்துவது, ஜூன் 20 முதல் 30-க்குள் மாநகராட்சி, நகராட்சி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆணையாளரிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடத்துவது, ஆகஸ்ட் இறுதியில் திருப்பூரில் உள்ளாட்சி சம்மேளன மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment