டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
இந்திய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதில் மோடி அரசு தோல்வியடைந்து விட்டது. ஆனால் அவர்களின் ஹிந்துத்துவா அரசியலில் வெற்றி பெற்றுள்ளது என எழுத்தாளர் ஆகார் படேல் கருத்து.
அரியானா மாநில சட்டமன்ற உறுப்பினர், ஹிந்து ராஷ்டிரம் அமைக்க உறுதிமொழி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். சாகாவிற்கு மாற்றாக, அரசமைப்பு சட்டத்தை வாசிக்க, குறிப்பாக உ.பி. யில் ஆம் ஆத்மி கட்சி முடிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
நீட் முதுகலை 2022 கலந்தாய்வு இன்னும் முழுமை பெறாமல், 2022 நீட் தேர்வை நடத்திட வேண்டாம் என ஒன்றிய சுகாதாரத்துறைக்கு மருத்துவ மாணவர் சங்கம் கோரிக்கை.
மோடி அரசின் தோல்விகளை மறைக்க மதப் பிரச் சினைகள் உருவாக்கப்படுகின்றன என மகாராட்டிரா காங் கிரஸ் தலைவர் நானா படோல் கண்டனம்.
தி டெலிகிராப்:
பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால தவறான ஆட்சி பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என ராகுல் காந்தி கருத்து.
டைம்ஸ் ஆப் இந்தியா:
பீகார் ஜமுய் கே.கே. கல்லூரியில் வரலாற்று ஹானர்ஸ் பட்டப்படிப்பில் திலீப் குமார் என்ற மாணவர் வரலாறு பாடத்தேர்வில் 100 மதிப்பெண்ணுக்கு 555 மதிப்பெண் பெற்றுள்ளதாக கல்லூரி அறிவித்தது. மொத்த மதிப்பெண் 800-க்கு 868 வழங்கப்பட்டது அம்மாநில கல்வி சீர் கேட்டை விளக்கும் விதமாக உள்ளது.
நான் பிரதமர் மோடியை கோட்சே சீடர் என்று அழைத்தது தவறு என்றால், டில்லி செங்கோட்டையிலிருந்து ஒருமுறை கோட்சே முர்தாபாத் (ஒழிக) என்று மோடி சொல்லட்டும் என குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி சவால்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment