சென்னை, மே 4- தமிழ்நாட்டில் நேற்றைய (3.5.2022) கரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று (3.5.2022) 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கரோனா பாதிக்கப்பட்ட வர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 54 ஆயிரத்து 58 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து நேற்று 56 பேர் குண மடைந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 545 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 488 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தாக்குதலுக்கு நேற்று யாரும் உயிரிழக்க வில்லை. இதனால், தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 என்ற அளவில் உள்ளது.
No comments:
Post a Comment