ஆதினங்களை பல்லக்கில் சுமக்கும் நிகழ்விற்கு தமிழ்நாடு அரசுதடை விதித்தால் அமைச்சர்கள் நடமாட முடியாது என வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் மன்னார்குடி ஜீயர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரத்தநாடு காவல்நிலையத்தில் நகர திராவிடர் கழகத்தின் சார்பில்6.5.2022 அன்று நகர திராவிடர் கழகத் தலைவர் ரெ.ரவிச்சந்திரன் தலைமையில் தஞ்சை மாவட்ட செயலாளர் அ அருணகிரி, மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர் தெற்கு நத்தம் பெரியார் நேசன், தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் அ.உத்திராபதி, நகர நகர செயலாளர் ரஞ்சித் குமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் தெற்கு நத்தம் குமரவேல் நகர, இளைஞரணி தலைவர் செந்தில்குமார், நகர இளைஞரணி செயலாளர் பேபி ரமேஷ், கண்ணந்தங்குடி கீழையூர் கு.கவுதமன் ஆகியோர் முன்னிலையில் புகார் அளிக்கப்பட்டது.
****
மன்னார்குடி ஜீயர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மேற்கு காவல்நிலையத்தில் தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் 6.5.2022 அன்று மாவட்டத் தலைவர் சி. அமர்சிங், தலைமையில் கழகப்பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் அ. டேவிட், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அ.இராமலிங்கம், கரந்தை தனபால், அ. பெரியார்செல்வன், போட்டோ மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் புகார் அளிக்கப்பட்டது.
****
மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமையில் புகார் அளிக்கப்பட்டது
****
தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் செல்வதற்கு தமிழ் நாடு அரசு அனுமதி மறுத்ததை முன்னிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழ்நாடு அமைச்சர்களும் நடமாட முடியாது என்று கூறிய மன்னார்குடி ஜீயரை கைது செய்யக்கோரி நாகப்பட்டினம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உடன் நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன்.
*****
மன்னார்குடி வழக்குரைஞர் சங்கம் சார்பில் மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசிக பொறுப்பாளர்கள் இரா.ரமணி தலைமையில் மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
No comments:
Post a Comment