சென்னை, மே 7 தமிழ்நாடு சட்டப் பேரவையில் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத் தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள் ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவை யில் நடந்த சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்:
"தென்னிந்தியாவின் ஸ்பா" என்று அழைக்கப்படும் குற்றாலம், நவீன வசதிகளுடன் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகுப் போக்குவரத்தை மேம்படுத்த கன்னியாகுமரியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக ஒரு புதிய படகு இறங்கு தளம் அமைக்கப்படும்.
கன்னியாகுமரியில் உள்ள முட்டம் கடற்கரை மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலாத் தலங்கள் ரூ.6.60 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்.
முத்துப்பேட்டை அலையாத்திக் காடு பகுதியில் படகு சவாரி, நடைபாதைகள், பறவைகளைக் காண பார்வை யாளர் மாடம் மற்றும் பிற வசதிகளுடன் கூடிய சுற்றுலாத் தலமாக ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
பூண்டி அணைக்கட்டு பகுதியில் நீர் விளையாட்டுக்கள், படகு சவாரி, சாகச விளையாட்டுகள் மற்று ம் பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட சுற்றுலாத் தலமாக ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்குடா கடற்கரைப் பகுதியில் நீர் விளையாட்டுகள், படகு சவாரி, நடைபாதை, கடற்கரை விளையாட்டுகள் மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட சுற்றுலாத் தலமாக ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பாளைம் ஏரியி ல் படகு சவாரி, நீர் விளையாட்டுகள் , பார்வையாளர் மாடம் மற்றும் பல்வேறு வசதிகள் ரூ.1.50 கோடி திட்ட மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
செங்கல்பட்டு மாவட்டம் கொளவாய் ஏரியில் படகு சவாரி, நீர் விளையாட்டுகள், பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் மற்றும் இதர வசதிகள் கொண்ட சுற்றுலாத் தலமாக ரூ.1.50 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல் மலைப் பகுதியில் சாகச சுற்றுலா, திறந்தவெளி முகாம்கள், பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் மற்றும் இதர வசதிகள் கொண்ட சுற்றுலாத் தலமாக ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். தூத்துக்குடி கடற்கரையில் நீர் விளையாட்டுகள் மற்றும் கடற்கரை விளையாட்டுகள் போன்றவைகள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட கடற்கரை சுற்றுத்தலமாக ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
மாமல்லபுரத்தில் உள்ள மரகதப் பூங்காவில் ஒளிரும் பூங்கா மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்கள் பொது-தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.
தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களின் கை வினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள் மற்றும் உணவு வகைகளை காட்சிப்படுத்த, "சென்னை விழா" என்ற பெயரில் ஒரு தேசிய கைவினைப் பொருட்கள், கைத்தறி மற்றும் உணவு விழா சென்னையில் ரூ.1.50 கோடி செலவில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும்.
சென்னையில் மலர், காய்கனிகள் மற்று ம் பனைப் பொருட்கள் கண்காட்சி - கோடை விழா, ரூ.25 இலட்சம் செலவில் தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து
நடத்தப் படும். சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் "எங்கும் ஏறலாம், எங்கும் இறங்க லாம்" என்ற பயணத் திட்டம் தொடங்கப்படும்.
No comments:
Post a Comment