தமிழ்நாட்டில் முதன்முறையாக பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 4, 2022

தமிழ்நாட்டில் முதன்முறையாக பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் கூட்டுறவு சங்கம்

 ஈரோடு,மே4- தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக, மகளிருக்கு என பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் கோபியில் தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபியில் நடந்த நிகழ்வில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், மகளிருக்கான பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது;

இந்த சங்கமானது, ஈரோடு மாவட்டம் முழுவதும் எல்லை யாகக் கொண்டு, கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சங்கத்தில் தற்போது 260 பெண்கள் உறுப்பி னர்களாக உள்ளனர். இந்த சங்கத்தில் பெண்கள் மட்டுமே உறுப்பி னர்களாகவும், பணியாளர் களாகவும் இருக்கின்றனர்.

அரசுத்துறை, கூட்டுறவு நிறு வனங்கள், பொதுத்துறை, உள்ளாட் சித்துறை, தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் அலுவலக பணிக் குத் தேவையான, தகுதியுள்ள சங்க உறுப்பினர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவது இந்த சங்கத்தின் நோக்கமாகும்.

மேலும் பெண்கள் பணி செய்யும் இடத்தில், உறுப்பினர்களின் நலன் கருதி பணி வழங்கும் அலுவல கத்துடன் அல்லது நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி, பணிப் பாதுகாப்பு வழங்கப்படும்.

சங்கத்தில் உறுப்பினராக உள்ள பெண்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள், மானியங்களை சங்கம் பெற்றுத் தரும். சங்க உறுப்பினர் கள் சுயமாகவும், கூட்டாகவும், சிறுதொழில், கைவினைத் தொழில்கள் செய்து அவர் களின் சமூக பொருளாதார நிலையினை மேம் படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment