சென்னை, மே 4- சட்டமன்றப் பேரவை யில் இன்று (4.5.2022) திருவண்ணா மலை கிளைச்சிறையில் கைதி தங்க மணி என்பவர் மரணத்தையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறியதாவது,
கடந்த ஏப்ரல் 29 அன்று எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இந்த அவையில் பேசியபோது, திரு வண்ணாமலை நிகழ்வு குறித்து இந்த அவையினுடைய கவனத் திற்கு அவர் கொண்டு வந்தார். அதற்கு விளக்கமளித்து நான் பேசியபோது ஒன்றைக் குறிப்பிட் டுச் சொன்னேன். உடற்கூராய்வு முடிந்ததற்குப்பின்பு, இந்த அவைக்கு அதனை நான் தெளிவுபடுத்துவேன் என்று சொல்லி இருந்தேன்.
அதுகுறித்த தகவல் என்ன வென்றால், திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் மது விலக்கு வழக்குப் பதிவு செய்து 26-4-2022 அன்று கைது செய்யப் பட்ட தங்கமணி, கிளைச் சிறைச் சாலையிலே ஒப்படைக்கப்பட்ட பிறகு அவருக்கு வலிப்பு ஏற்பட்ட காரணத்தால் 27-4-2022 அன்று மரணம் அடைந்திருக்கிறார். மர ணம் குறித்து வழக்குப் பதிவு செய்து, நீதித் துறை நடுவர் அவர் களால் விசாரணை மேற்கொள் ளப்பட்டு, உயர்நீதிமன்ற வழி காட்டுதலின்படி உடற்கூராய்வு முடிக்கப்பட்டது.
காவல்துறை வடக்கு மண்டலத் தலைவர், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகி யோர் இறந்தவரின் உறவினர்களி டம் நடந்த நிகழ்வுகளையெல்லாம் கூறி, மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட (வீடியோ) காட்சி களையெல்லாம் காண்பித்து விளக்கி, புலன் விசாரணை நியாய மாக நடத்தப்படும் என்று தெளி வுபடுத்தப்பட்டு, இறந்தவரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வழக்கு விசாரணை மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு -சி.பி.சி.அய்.டி விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது. தங்கமணி யைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிய காவல் துறையினர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு விட்டார்கள். மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறையின் புலன் விசாரணை அறிக்கையின்படி, அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்பதை இந்த மாமன் றத்திற்கு நான் தெரிவித்துக் கொள் கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment