சென்னை, மே 6 - திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்களுக்கு கருஞ்சட்டை விருதினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணி யன் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் 29.-4.-2022 அன்று மாலை சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் கருஞ்சட்டை விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்க மாக புதுகை பூபாலன் குழுவினரின் பகுத்தறிவு சிந்தனையை தூண்டகூடிய வகையில் கலகலப்பாக அரங்கேற்றினர்.
தோழர் சிற்பி செல்வராசன் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு செல்வின் சவுந்தரராசன் தலைமை தாங்கினார்.
விழா குறித்த அறிமுக உரையினை திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆற்றி னார்.
பேரவை பொறுப்பாளர்கள் பொள் ளாச்சி உமாபதி, சிங்கராயர், பெல் ராசன், மகாலட்சுமி, காசு.நாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப் பினர் மயிலை த.வேலு, தியாகராயர் நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.கருணாநிதி வாழ்த்துரை வழங் கினார்கள்.
வழக்குரைஞர் அ.அருள்மொழி
திராவிடர் கழகப் பிரச்சாரச் செய லாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி பாராட்டு உரை:
திராவிட இயக்க கொள்கை, ஆற்றல், உழைப்பு, உறுதிமிக்க மூன்று சுயமரி யாதை வீரர்களுக்கு விருது அளிக்கும் நிகழ்வில் பங்கேற்று பாராட்டி பேசுவ தற்கு வாய்ப்பு அளித்துள்ள பேரவைக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து பாராட்டுரையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொருளாளர் எழில் இளங்கோவன், திராவிட இயக்கச் செயற்பாட்டாளர் கொளத்தூர் சின்னராசு சமூக தொண் டினை குறிப்பிட்டார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் திராவிடர் இயக்கத்தின் களஞ்சியமாகவும், வர லாற்று பெட்டகமாகவும் இருந்து வருபவர். நெருக்கடி நிலை காலத்தில் அரசுப் பணியில் இருந்துக்கொண்டே - இயக்கப் பணி - விடுதலை பணியை செய்தவர். பிறகு முழு நேர பணியை தொடர்வதோடு இன்று வரை அதனை செய்து வருகிறார். 23-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளதையும் எடுத்துக் கூறினார்.
தந்தை பெரியார், அன்னை மணியம்மை யார், ஆசிரியர்
கி.வீரமணி ஆகிய மூன்று தலைவர்களின் அன்பை பெற்றவராகவும், இயக் கப் பணியே வாழ்நாள் பணி என்று பணியாற்றி வருவதை குறிப்பிட்டு பாராட்டுரை வழங்கி னார். கருஞ்சட்டை படை யின் பலத்த கரவொலிக் கிடையில் கருஞ்சட்டை விருதினை பெறக்கூடிய விருதாளர் களுக்கு ரூபாய் ஒரு லட்சம் காசோலையினையும், நினைவு பரிசினையும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிர மணியன் வழங்கி வாழ்த்துரை ஆற்றி னார். சிறந்த சிந்தனையாளர்கள் பெறக் கூடிய விருதினை வழங்கக்கூடிய வாய்ப் பினை அளித்த திராவிட இயக்க தமிழர் பேரவைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
தமிழர் தலைவரின் வாழ்த்து கடிதம்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்த்து கடிதமும் வாசிக் கப்பட்டது. நிகழ்ச்சியினை சிறப்புற தோழர் இரா.உமா தொகுத்து வழங் கினார்.
நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் ச.இன் பக்கனி, வெற்றிச்செல்வி பூங்குன்றன், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர்கள் ஆ.வெங்க டேசன், வி.மோகன், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, அன்புமதி குணசேகரன், காமராஜ், பெரியார் செல்வி, இறைவி,பெரியார் மாணாக்கன், பூவை செல்வி, ஓசூர் செல்வி செல்வம், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், மயிலை பாலு, தென்சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வநாதன், அரும் பாக்கம் ச.தாமோதரன், பூவை தமிழ்ச் செல்வன், சு.மோகன்ராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்துக் கொண்டனர்.
இறுதியாக எட்வின் நன்றி தெரிவித்து நிகழ்ச்சியை சரியாக 9 மணிக்கு நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment