முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வசந்தம் கு.இராமச்சந்திரன் குடும்ப விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 4, 2022

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வசந்தம் கு.இராமச்சந்திரன் குடும்ப விழா

கோவை, மே 4- கோவை பெரியார் பெரும் தொண் டர் வசந்தம் கு.இராமச்சந் திரன் அவர்களின் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கோவை பீளமேடு அருகில் உள்ள ஆர்பீஸ் ஓட்டல் அரங்கில் ஞாயிற் றுக்கிழமை காலை 11 மணி அளவில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ம.சந்திரசேகர் தலைமை யில் நடைபெற்றது.

மாநகர கழக தலைவர் க.வீரமணி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கழக செயலாளர் திக.செந்தில்நாதன், மேனாள் மாவட்ட செயலாளர் பழ.அன்பரசு, மேட்டுப் பாளையம் மாவட்ட கழக தலைவர் சு.வேலுச் சாமி, பொதுக்குழு உறுப் பினர் பொறியாளர்.தி பரமசிவம் ஆகியோர் முன் னிலை வகித்து சிறப்பித் தனர்.

திமுக சொத்து பாது காப்பு குழு உறுப்பினர், மேனாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி அவர்களும், திராவிடர் கழக மாநில அமைப்பா ளர் ஈரோடு க.சண்முகம், பெரியார் மருத்துவ குழும இயக்குநர் மருத்துவர் கவுதமன் அவர்களும், பெரியார் மணியம்மை கல்லூரி மேனாள் இணை துணை வேந்தர் பேராசிரி யர் மு.தவமணி அவர்க ளும், மேனாள் மகளிர் ஆணையத் தலைவர் ராமாத்தாள் அவர்களும், இந்திய நூற்பாலை சங் கம் தலைவர் மந்திரகிரி சுப்ரமணியன் அவர்க ளும், மேனாள் மாவட்ட தலைவர் காங்கிரஸ் சின் னையன் அவர்களும், விழா வில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்ந்து கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் அவர் கள் சிறப்புரை நிகழ்த்தி னார்.

தமிழ்முரசு தோழர் நிகழ்வை அழகாக தொகுத்து வழங்கி சிறப்பு செய்தார்

நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ் செல்வம், தொழிலாளர் அணி கழக வெங்கிடு, மண்டல மகளிரணி செய லாளர் கலைச்செல்வி, மேட்டுப்பாளையம் மாவட்ட செயலாளர் காசு.ரங்கசாமி, பழ.அன் பரசு, மேட்டுப்பாளையம் பாலசுப்பிரமணியம், வெ.சந்திரன், கணபதி காமராஜ், சின்னையன், பொள்ளாச்சி நகர தலை வர் வீரமலை, பொள் ளாச்சி நகர செயலாளர் நாகராஜ், மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து, முத்து, மத்திய பகுதி செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, வேலாண்டிபா ளையம் சுரேசு, பிரதீப் குமார், புலியகுளம் நாக ராஜ், நடராஜன், ஜிடி நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் & பெரியார் புத்தகம் நிலையப் பொறுப் பாளர் அ.மு.ராஜா, கு. வெ.கி.செந்தில், கணபதி காமராஜ், சின்னைய ரங்கசாமி, சுடர்வேந்தன், தெ.குமரேசன், சகாய மேரி, த.க.யாழினி, தேவிகா, மருத்துவர் சுப்புலட்சுமி, சுமதி, வேலுமணி,திலக மணி, ராஜேஸ்வரி, கவிதா,  தேவிகா, ஆசிரியர் பழனி யப்பன், கல்பனா, கயல் விழி, உள்ளிட்ட கொள்கை உறவுகள் கழகத் தோழர் கள் அதேபோல ரத்த உறவுகள் தாமோதரன் - தனலட்சுமி, வசந்தன், ரவிசந்திரன் (தம்பி மகன்) நாராயணசாமி, ரங்க சாமி, பேரன் பேத்திகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment