அண்ணாமலைப் பல்கலைக் கழக பொருளா தாரத் துறை ஆசிரியரும், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மேனாள் முதல்வரும், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி பொருளாதாரத் துறை பேராசிரியரு மான (HOD) பேராசிரியர் லெப்ட னன்ட் கர்னல் கேப்டன் அ.சுப்பையா அவர்கள் மயிலாடுதுறையில் இன்று (4.5.2022) காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரமும், வருத்தமும் அடைகிறோம்.
மிகவும் கண்டிப்பான ஆசிரியர் என்று மாணவர் களிடையே பெயரெடுத்த பேராசான் அவர். என்.சி.சி. அதிகாரியாக இராணுவப் பயிற்சியும் பெற்ற மிடுக்கும், பெருமையும் வாய்ந்தவர்.
அவருக்கு மூத்தவர் திராவிட இயக்கப் பற்றாளர்
அ.காந்திமதி நாதன் (102) வாழுகிறார். அவரது தங்கை பேராசிரியை அ.சுலோச்சனா எனது பல்கலைக்கழகத் தோழி - சமகாலத்தவர் - மறைந்த சகோதரிகள் கமலா, சித்ரா எல்லாம் திராவிடர் இயக்கப் பற்றுறுதி கொண்டவர்கள்.
நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்தாலும் இழப்பு பெரும் இழப்பே ஆகும்.
அவரை இழந்து வருந்தும் அவரது வாழ்விணையர், பிள்ளைகள், குடும்பத்தவர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
என்னை ‘மாணவர்' என்று அழைத்தவர். பிறகு ‘நண்பர்' என்று அழைத்துப் பெருமைப்படுத்தியவர். அவர்தம் பண்பும், பாங்கும் என்றும் மறக்க இயலாதவை.
No comments:
Post a Comment