டெண்டர் பணிகளை முடிக்காமல் பணம் பெற்றால் கடும் நடவடிக்கை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 4, 2022

டெண்டர் பணிகளை முடிக்காமல் பணம் பெற்றால் கடும் நடவடிக்கை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

திருச்சி, மே 4 டெண்டர் பணிகள் முடிவடையாமல் பணம் பெற்றால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் பொதுப்பணித் துறையின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் பார்வையிட்டனர். 

இதன் பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

டெண்டர் பணிகள் முடிக்காமலே சில இடங்களில் மிரட்டி பணம் வாங்குவதாக தகவல்கள் வருகின்றன. இது குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகிறோம். அதிமுக, திமுக என்று எந்தவித பாரபட்சமும் இல்லாமல் டெண்டர் பணிகள் முடிவடையாமல் பணம் பெறுபவார்கள் என்றால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment