திறமை - பணியாற்றும் தன்மை- தொழில்நுட்ப ஆளுமைகளால்
சென்னையை நோக்கி படையெடுக்கும் உலகப் பெரு நிறுவனங்கள்
"தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ ஆங்கில நாளேடு புகழாரம்!
உலகப் பெரு நிறுவனங்கள் சென்னையை மறு கண்டுபிடிப்பு செய்துள்ளன. உள்ளூர் திறமைகளாலும், எளிதாகப் பணியாற்றும் தன்மையாலும் ஈர்க்கப்பட்ட பன்னாட்டு நிறுவனங் கள் தங்கள் பெரும் (மகா) தொழில் திறன் மய்யங்களை உயர்ந்த மதிப்பும், அதிக வருவாயும் கொண்ட வேலை வாய்ப்புகளை வழங்கி அமைத்து வருகின்றன என்று "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ ஆங்கில நாளேடு எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து "உலகின் வல்லமை மிக்க பெரும் நிறுவனங்கள் மறு கண்டுபிடிப்பு செய்யும் சென்னை’’ என்ற தலைப்பில் "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ ஆங்கில ஏடு (2.5.2022) இதழில் அந்தக் குழுமத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் சிந்து ஹரிஹரன் எழுதி யுள்ள சிறப்புக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:-
தரமான தொழில்நுட்பத் திறமை, சிறப்பான உள்கட்டமைப்பு மற்றும் ஒப்பு நோக்கில் வாழ்க்கைச் செலவு குறைவான நிலை ஆகியவை பன்னாட்டு நிறுவனங்களின் தேடுதல் சாதனத்தில் தங்கள் பின்னணி அலுவலகங்களையும் அல்லது கடலுக்குள் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு உகந்த இட மாகவும் சென்னையைக் கண்டுபிடிக்கச் செய்துள்ளது. ஆனால், இந்த மாநகர் பெங்களூருவிடமும், அய்தரா பாத்திடமும் 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் "கூக்லே’’, "இன்டெல்’’, "வோல்சாம்’’ "அமேசான்’, "பேஸ் புக்’’ மற்றும் பல இதர நிறுவனங்களின் தொழில் நுட்ப உலகத் திறன் மய்யங்களை இழந்துள்ளது. தொற்று நோய் ஊரடங்குக்குப் பிறகு உள்ள இந்தக் காலம் உலகத் திறன் மய்யங்களின் வளர்ச்சி அலையில் சவாரி செய்வது சென்னைக்கு உரியதாகும். கடந்த இரண்டு மாதங்களில் 10க்கு மேற்பட்ட உலக நிறுவனங்கள் தங்கள் புதிய தொழில் நுட்ப மய்யங்களை அமைத்தோ அல்லது ஏற்கெனவே இருந்த நிறுவனங்களை விரிவுபடுத்தியோ உள்ளன. இந்தப் பட்டியலில் "அமேசான்’’, "ஜூம் இன்ஃபோ’’, "ஜூம்’’, "கேபிடஸ்’’ டெரிடென்ஸ் "நீல்சென் அய் கியூ’’ "ரிம்பிள்’’ "மிட்சோ கோ’’ மற்றும் பி.என்.ஒய். மெலான் ஆகியவை அடங்கும்.
திறமைக் குவியலுக்கு...
"நாங்கள் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட தேவையான பணியாளர்களை விட அதிகமானவர்களை இங்கேயே கண்டுபிடித்துள்ளோம். மேலும் பலரைத் தேர்ந்தெடுக்கவுள்ளோம்" என்று அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன. இது சென்னையின் திறமைக் குவியலுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்புதலாகும். ஆனால், வழிகாட்டி அமைப்பு ("கைடன்ஸ் பீரோ’’) போன்ற அமைப்புகளைக் கையாளுவதும் உதவியாக இது உள்ளது. உலகத் திறன் மய்யங்கள் மற்றும் கிராமப்புற வளர்ச்சி ஆகியவற்றுக்கு வெவ்வேறு கொள்கைகளின் கீழ் பணியாற்றும் ஒரே மாநிலம் தமிழ்நாடேயாகும். அவை வெளியிடப்படும்போது மேலும் அதிக அளவில் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும். அய்தராபாத்தில் தன்னுடைய மிகப்பெரிய அலுவலகத்தை அமைத்துள்ள "அமேசான்’’ நிறு வனம் சென்னையை தனது இரண்டாவது மிகப்பெரிய ஆதார இடமாகக் கொண்டுள் ளது. அது சுமார் 6000 தொழிலாளர்களைத் தங்க வைப்பதற்காக உலக வர்த்தக மய்யத்தில் பல மாடிகளை ஏற்பாடு செய் துள்ளது. பெங்களூருவில் ஒரு தொழில்நுட்ப மய் யத்தைக் கொண்டுள்ள "ஜூம்’’ நிறுவனம், இரண் டாவது முக்கிய இடமாகச் சென்னையைத் தேர்ந் தெடுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பொறியாளர் களின் அணியோடு பணியாற்றுவதன் மூலம் "ஜூம்’’ நிறுவனத்தின் மென்பொருள் மய்யம் சிறப்பாகச் செயல்படும். "நாங்கள் இந்த மய்யத்தின் நிலைகளை. ஏற்கெனவே திறந்து விட்டோம். பணியமர்த்துதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது’’ என்று "ஜூம்’’ நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் பொறியாளர்கள் பிரிவின் தலைவர் வேல்சாமி சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார். இது வெறும் அடிப்படையான தொழில்நுட்ப / பொறியாளர் பணிகள் மட்டுமல்ல; உயர்ந்த மதிப்புக்குரிய பணிகளும் சென்னையின் வழி யில் வந்து கொண்டிருக்கின்றன "நீல்சன் அய்.க்யூ’ நிறுவனத்தின் ஆய்வாளர்கள் நிறுவனம் தன்னுடைய 2000க்கு மேற்பட்ட அலுவலர்களைக் கொண்ட மிகப்பெரிய உலக முக்கிய இடத்தை ஏப்ரல் மாதம் தொடங்கியது. "இங்கே நாங்கள் புள்ளி விபர அறிவியல், பொறியியல், ஏ.அய். மற்றும் எம்.எல். ஆகியவற்றை மிகவும் கூர்மையாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் விரிவான சில்லறை வணிகம் மற்றும் கடைகளின் பழக்க வழக்கங்களைப் புரிந்து கொள்வதுடன் வழங்க முடியும்’’ என்று நீல்சன் அய்.க்யூவின் உலக சி.டி.ஓ. (தலைமை தொழில்நுட்ப அதிகாரி) மொஹித் கபூர் கூறுகிறார். இந்தச் செயல்பாடு சென்னையில் மட்டுமல்ல; உதாரணமாக "டிலாய்ட் இந்தியா’’ நிறுவனம் தன்னுடைய "திறன் மேம்பாட்டு மய்யங்களில்’’ ஒன்றை கோயமுத்தூரில் அமைத் துள்ளது. ஒரு லட்சம் மென்பொருள் மய்யங்கள் எங்களுடைய தொழில் நுட்பங்களின் திறமைகளை மேம்படுத்தும், அத்துடன் வாடிக்கையாளர்களுக்கான முக்கியப் பகுதிகளான சைபர், கிளவுட், ஆய்வுகள் (அனா லிஸ்டிக்ஸ்) ஏ.அய். மற்றும் ஈ.ஆர்.பி. பகுதிகளில் வழங்குவதையும் மேம்படுத்தும் என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். "இதர மாநிலங்களுடன் ஒப்பிடுவதில் தங்களைத் தாங்களே நிலை நிறுத்திக் கொள்ளாமல் தமிழ்நாடு தன்னுடைய சொந்த பலங்களில் சிறந்து விளங்கி வரு கிறது’’ என்று தகவல் தொழில்நுட்பத் துறை (‘அய்.டி.) செயலாளர் நீரஜ் மிட்டல் தெரி வித்துள்ளார். உலக திறன் மய்யங்கள் இங்கே அமைக் கப்பட்டு வருவதுடன் உயர் தரமான மற்றும் உயர்தர அளவில் ஊதியம் அளிக்கும் வேலை வாய்ப்புகளையும் அளித்து வருவதாகவும் அவர்கள் வெறுமனே கடலுக்குள் மட்டும் மய்யங்களை அமைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
"தமிழ்நாடு உலகத் திறன் மய்யங்களின் முக்கிய இடமாக இருபது ஆண்டுகளுக்கு முன்பு திகழ்ந்து வந்த போது, அமெரிக்க வங்கியின் சிட்டி குழுமம் மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆகியவை தொடர்ச்சியாக மாநிலத்திற்குள்ளும் அண்டை மாநிலங்களுக்குள்ளும் நுழைந்து சந்தைப்படுத்து வதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன் மூலம் தொழில் நுட்பப் பெருநிறுவனங்களை ஈர்த்தன. அதன் மூலம் தமிழ்நாடு வர்த்தக உலக திறன் மய்யங்கள் இரட்டிப்பாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று `காக்னிசன்ட் இந்தியா’ நிறுவனத்தின் மேனாள் பங்குதாரர் ராம்குமார் ராமமூர்த்தி கூறியுள்ளார்.
உலகத் திறன் மய்யங்கள்
எனினும் `ஸின்னோவ்’ நிறுவனத்தின் அங்கமான அமைப்பு அளித்துள்ள புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் உள்ள உலக திறன் மய்யங்களில் 10 சதவிகிதத்தைத் தான் தமிழ்நாடு தனது பொறுப்பில் பெற்றுள்ளது. பகுதிவாரியான கலப்பில் மென்பொருள், தானியங்கிகள் மற்றும் தொழில் அமைப்புகள் கணக்கில் ஏறக்குறைய 50 சதவிகித உலகத் திறன் மய்யங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. வல்லு நர்களை நியமிக்கும் நிறுவனமாக எக்ஸ்ஃபெனோ, "திறமைகளைக் கற்பித்துக் கூறுவதில் இங்கு பெங்களூருவில் உள்ள கடுமையான போட்டியை விட 2.3 சதவீதம்தான் குறைவாக உள்ளது. தமிழ்நாடு வரவேற்கும் கலவையான மாநில அரசின் கொள் கைகள், உயர்தரமான உள் கட்டமைப்பு வசதிகள், நிதி நிலையில் கவர்ச்சிகரமான முதலீடுகள் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் ஈ.ஆர்.டி. நோக்கங்களைக் கொண்ட உலகத் திறன் மய்யங்களை ஈடுபடச் செய்யக்கூடிய மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டுள்ளது. சென்னைக்கும் கோயம்புத்தூருக்கும் இடையில் கட்டமைக்கப் பட்டுள்ள உலகத் திறன் மய்யங்களில் திறமை ஆற்றல் கொண்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட உழைப்பாளிகள் இயங்கி வருகின்றனர்" என்று `எக்ஸ்ஃபினேர்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் கமல்கரந்த் தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாடு ஏறக்குறைய உலகத் திறன் மய்யத் திற்கு வந்தபோது, கடைசி வரிசையில் இருக்கும் மாணவனைப் போலத்தான் இருந்தது. மூத்த திறமை சாலி யாரையும் சென்னைக்கு மறுபடியும் அனுப்பி வைக்கும் வகையில் மிகவும் வரவேற்கத்தக்கதாக இல்லை’’ என்று "ஸின்னோவ்’’ நிறுவனத்தின் பங்குதாரர் முகமது பெரஸ்கான் கூறுகிறார். "எனினும் அய்.டி./பி.பி.எம். திறமைகள் இந்த மாநிலத்தில் இருப்பதும் இதர சந்தைகள் நிறைவை அடைந் திருப்பதும் அதற்குச் சாதகமான நிலைகளாக உள்ளன’’ என்றும் அவர் கூறியுள்ளார்.
"இன்னமும் கூட இந்த மாநிலத்தைப் பொறுத்த வரை தீர்க்கப்பட வேண்டிய அறிவுபூர்வ பிரச்சினை உள்ளது. அது தீர்க்கப்பட்டு அது இன்னமும் வலிமை யான உலகத் திறன் மய்ய கலாச்சாரச் சமுதாயமாக உயர்த்தப்படுவதற்கு ஊக்குவிக்கப்பட்டு, நிகர உழைப்பின் திறன்களால் பலனடையவேண்டும்’’ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இவ்வாறு "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ ஆங்கில நாளேட்டின் சிறப்புச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையின் இணைப்பாக "தனித் திறமை மய்யங்களின் கூடாரம்!’’ என்ற ஒரு செய்தியும் இடம் பெற்றுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்ப தாவது:-
உலகத் தனித் திறமை
மய்யங்களின் கூடாரம்!
தமிழ்நாட்டில் 2022 ஏப்ரலின்படி சுமார் 150 உலக தனித் திறமை மய்யங்கள் உள்ளன: ஸின்னோவ் உள்பட கடந்த 2 மாதங்களில் மட்டும் 10க்கு மேற்பட்ட உலகத் திறன் மய்யங்கள் சென்னையில் தொடங்கப்பட்டுள் ளன. இவற்றுள் அமேசான், ஜூம் இன்ஃபோ, கேபிடஸ், ஜூம், டிரடென்ஸ் எ.அய்., நீல்சன் அய்.க்யூ, டிரிம்பிள், மிட்சோகோ ஆகியவை அடங்கும். சமீபத்திய லாபங்கள் அன்னியில் இந்த மாநிலம், இந்தி யாவில் உள்ள மொத்த உலகத் திறன் மய்யங்களில் 10 சதவிகிதத்தை தன்னிடம் பெற்றுள்ளது. அவை சென்னை, கோயம்புத்தூர், சேலம் மற்றும் மதுரையில் அமைந்துள்ளன என்று ஸின்னோவ் கூறுகிறது.
மென்பொருள், தானியங்கிகள் மற்றும் தொழிற் சாலைகள் கணக்கில் ஏறக்குறைய 50 சதவிகிதத்தையும் உலகத் திறன் மய்யங் களில் பெற்றுள்ளது. அத்துடன் கிராமப்புற வளர்ச்சி யில் பல்வேறு வகையான தகவல் களையும் பெற்றுள்ளது ஆதலால் ஆழமான தொழில் நுட்பம் தேவைப்படுகிறது. ஸின்னோவ், 100க்கு மேற்பட்ட உலகத் திறன் மய்யங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறது. இதில் அய்தராபாத்தும் பெங்களூ ருவும் பெரும் பகுதி வாய்ப்பை பெறும். இதில் சென்னை 3ஆவது இடத்தில் உள்ளது. உலகத் திறன் மய்யங்களைக் கொண்டு வருவதில் தமிழ்நாட்டின் முயற்சிகளை எல்லா கண்களும் கவனித்துக் கொண்டிருக்கின்றன. மேலும் கிராமப்புற வளர்ச்சிக் கொள்கையும் இந்த வளர்ச்சிக்கு எரி பொருளாக இருக்கும். இத்துடன் 18 நகரங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் செய்முறைப் பயிற்சி (அப்ரன்டிஸ்)யில் இந்த ஆண்டின் முதல் பாதியில் சென்னை முதலிடம் வகிக்கிறது என்றும் கணக்கெடுப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் டில்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் அய்தரா பாத் நகரங்களும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ ஆங்கில நாளேட்டின் சிறப்புச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நன்றி: ‘முரசொலி', 3.5.2022
No comments:
Post a Comment