30.04.2022 சனிக்கிழமை அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க பெரியார் சமூகக் காப்பு அணியின் பயிற்சிகள் தொடங்கவிருக்கின்றன.
பெரியார் சமூகக் காப்பு அணியின் பயிற்சியில் விருப்பமுள்ள 35 வயதுக்குட்பட்ட இளைஞரணி - மாணவர் கழக தோழர்கள் உடனடியாக தங்களுடைய தன் விவரக்குறிப்பினை periyarspf@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது திராவிடர் கழக தலைமை நிலைய முகவரிக்கோ அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திராவிடர் கழகம், இளைஞரணி மற்றும் மாணவர் கழகத்தின் மாநில, மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் தங்களுடைய பொறுப்பிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள இளைஞரணி - மாணவர் கழக தோழர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க வழிகாட்டிட கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment