ஆவடி நகர பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த மேனாள் தெற்கு ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஜி.சுப்பிரமணி என்ற மல்ல மணிமாறன் (வயது 94) அவர்கள் நேற்று 2.5.2022 திங்கட் கிழமை இரவு 7.20 மணிக்கு வயது முதிர்ச்சி காரணமாக உடல் நலக் குறைவால் மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அவர் பிரிவால் பெரும் துயரத் திற்கு ஆளாகி இருக்கும் அவர்கள் மகள், மகன் மற்றும் குடும்ப உறவினர்களுக்கும் ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பாக ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் தெரிவிக்கப்பட்டது. அன்னாரது உடல் இன்று 3.5.2022 செவ் வாய்க் கிழமை மாலை 4 மணிக்கு ஆவடி காமராஜர் நகர் சாலை யில் 4ஆவது தெருவில் உள்ள மின்சார தகன மேடையில் எரியூட்டப்படும்.
No comments:
Post a Comment