பிரிட்டனிலுள்ள 'பியூசன் புராசஸிங்' என்ற வாகன தயாரிப்பாளர்கள், பயணியர் பேருந்தில் தானியங்கி தொழில்நுட்பத்தை சோதிக்கத் தொடங்கிஉள்ளனர். இரண்டு வாரங்களுக்கு மட்டும்தான் வெள்ளோட்டம் பார்க்கப்படும். பிறகு, இந்த ஆண்டின் இறுதியில், ஸ்காட்லாந்திலுள்ள போர்த் ரோட் பிரிட்ஜ் என்ற சாலையில், 22.5 கி.மீ நீளமுள்ள பேருந்து வழித்தடத்தில் 'ரெகுலர் சர்வீஸ்' தொடங்கிவிடும் என பியூசன் புராசஸிங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேருந்துகளுக்கு தானியங்கி தொழில்நுட்பத்தை பொருத்துவது, அய்ரோப்பாவில் இதுவே முதல் முயற்சி. பிரிட்டன் அரசு, சில ஆண்டுகளுக்கு முன், தானோட்டி தொழில்நுட்பத்தை, பிரிட்டனுக்குள்ளேயே உருவாக்குவதை ஊக்குவிக்க, 'இன்டெலிஜென்ட் மொபிலிட்டி பண்ட்' என்ற, ரூ.963 கோடி நிதியை ஒதுக்கியிருந்தது. அதை பயன்படுத்தி பியூசன் புராசஸிங், பிரிட்டன் விஞ்ஞானிகளையே பயன்படுத்தி தானோட்டி பேருந்து தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
பியூசனின் 5 தானியங்கி பேருந்துகள், தலா 36 பயணிகளை ஏற்றிச் செல்லும். இதன்படி, வாரத்திற்கு 10 ஆயிரம் பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும். ஓட்டுனர் இல்லாத பேருந்தில் பயணிக்கும் அனுபவம் பாதுகாப்பானது என்று மக்கள் நம்பத் தொடங்கிய பிறகு, பிரிட்டன் முழுவதும் தொலைதுர பேருந்து சேவைகளை பியூசன் நிறுவனம் தொடங்கும்.
No comments:
Post a Comment