புதுடில்லி, மே 31- நாட்டின் 2021-2022 நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விழுக்காடு 8.8ஆக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 9.1 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலை யில், தற்போது குறைத்து, 8.விழுக்காடாக மூடிஸ் நிறு வனம் அறிவித்துள்ளது. கச்சா எண்ணெய், உணவு, இரசாயனம் ஆகியவற்றின் விலை உயர்வு, குடும்பங்க ளின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, அவர் களின் செலவினங்களை குறைத்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி உயர்வை அறிவிக்கும் நிலையில், தேவைகளுக்கான மீட்சி மேலும் தாமதமாகும். இது போன்ற காரணங்களால், நடப்பு ஆண்டில், பொருளாதார வளர்ச்சியை 9.1 விழுக்காட்டிலிருந்து, 8.8 விழுக்காடாக குறைத்து கணித்து அறிவித்துள்ளோம் என்று மூடிஸ் குறிப்பிட்டுள்ளது. செல்பேசி, குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சி உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருள் களை தயாரிக்கும் நிறுவனங்கள், ஜூலை மாதம் வரையிலான தங்கள் உற்பத்தி இலக்கை குறைத்துவிட்டன.
கடந்த ஓராண்டில், அலைபேசி மற்றும் வீட்டு உபயோக சாதனங்கள் விலை 9 முதல் 15 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக விலை அதி கரித்து வருவதை அடுத்து, தேவைகளில் சற்று மந்த நிலை ஏற்படுவதால், இந்நிறுவனங்கள், உற்பத்தியை 10 விழுக்காட்டளவில் குறைத்து விட்டன. அலைபேசியைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும், தங்கள் உற்பத்தித் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளன. அலைபேசி விற்பனை, 30 விழுக்காடு குறைந்துள்ளதாக அத்துறையினர் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, அலைபேசி தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் உற்பத்தி இலக்கை முன்னர் திட்டமிட்டிருந்த நிலையிலிருந்து குறைத்து விட்டன. இப்போது இந்த நிறுவனங்கள், கை வசம் இருப்பதை விற்பதில்தான் முயற்சிகளை மேற் கொண்டுள்ளன. அலைபேசி விற்பனை, கடந்த மார்ச் காலாண்டிலிருந்து சரிந்து வருகிறது. இந்நிலையே இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என கருதப்படுகிறது.
No comments:
Post a Comment