சென்னை எழும்பூர் இரயில்வே நிலையம் பின்புறமும், பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை நோக்கியும் அமைந்துள்ள அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சிலை இருக்கும் வேனல்ஸ் சாலை (ஆல்பர்ட் திரையரங்கம் இருக்கும் சாலை உள்பட்ட பகுதி) தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு சாதனை நாளான இன்று (7.5.2022) அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பெயர்ப் பலகையும் திறக்கப்பட்டது.
அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, வணக்கத்திற்குரிய மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் முன்னிலையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.
நிகழ்விற்கு வந்திருந்த அமைச்சர்கள், மேயர், துணை மேயர், எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் இ.பரந்தாமன் ஆகியோருக்குக் கழகத் தலைவர் சால்வைகள் அணிவித்து சிறப்பு செய்தார். இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment