பட்டணப்பிரவேசத்தை நடத்தாவிட் டால் அமைச்சர்கள் நடமாடமுடியாது என்றும், உயிரைக் கொடுத்தாவது பட்ட ணப்பிரவேசத்தை நடத்துவோம் என் றும், நானே தோளில் தூக்கிச் செல்வேன் என்றும், தூக்கப்படும் இடத்தில் நான் இருப்பேன் என்றும், தடையை நீக்க வேண்டும் என்றும், சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தும் கொக்கரிப்போரே... 1952 ஆம் ஆண்டு ஓர் ஆதினமே பட்டணப்பிரவேசத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் என்பது தெரியுமா?
1952 வரலாறு தெரியாத வம்பர்களே! 2020 பிப்ரவரி 12 அன்று இதே தருமபுரம் ஆதினம் பல்லக்கில் பவனி வராமல் நடந்து சென்றதாவது தெரியுமா? இந்த நிகழ்வு அக்கப்போர் பேர்வழிகளுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால், ஆதி னம் மறந்ததன் பின்னணி என்ன?
குன்றக்குடி சன்னிதானம்: மடங்களின் மரபுகளை மாற்றி புதுமையைப் புகுத்திய வர். ஆன்மிகக் கருத்துகளைக் காட்டி லும் வள்ளுவத்தை அதிகம் பேசியவர். புராண - இதிகாச - வேத மந்திரங்களை ஓதியதைவிட சமத்துவத்தை- மனித நேயத்தை - மொழியுணர்வை அதிகம் பேசியவர் தான் தவத்திரு குன்றக்குடி அடிகளார் .
1952 ஆம் ஆண்டு குன்றக்குடி மடத் தின் குருமகா சன்னிதானமாகப் பொறுப் பேற்ற அருணாச்சல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எனும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் மனிதனை மனிதனே சுமக் கும் பல்லக்கு முறையை, தான் பொறுப் பேற்ற முதலாண்டிலேயே ஒழித்தார் என்பதையும், இதே தருமை ஆதினத் திலும் 55 ஆண்டுகளுக்கு முன்னால் திராவிடர் கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, தவத்திரு குன்றக்குடி அடிகளா ரின் முயற்சியால் பட்டணப்பிரவேசம் நிறுத்தப்பட்டதையும் இன்றைய ஆதி னத்துக்கு நினைவூட்டுகிறோம்.
பழக்க வழக்கம் என்ற பெயரால் மடாதிபதிகள் பக்தி என்ற போதைச் சரக்கை, மதவெறி நஞ்சை தன்னிடம் அடிமை சேவகம் செய்யும் மக்களின் உள்ளத்தில் கலந்து, மனிதநேயத்தை - சமத்துவத்தை - சகோதரத்துவத்தை சாக அடிக்க பட்டணப்பிரவேசத்தை நடத்தத் துடிப்பதும், அதற்கு பார்ப்பனர்கள் துதி பாடுவதும் - வன்முறையைத் தூண்டும் விதமாக ஜீயர் - எச்.இராஜா போன்றோர் கொக்கரிப்பதும் எத்தகைய ஆபத்தான போக்கை ஏற்படுத்தும் என்பதைத் திரா விட சந்நிதானங்கள் சிந்திக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள 50-க்கும் மேற் பட்ட மடங்களுக்கு ஏறக்குறைய 21 ஆயிரத்து 282 ஏக்கர், 5 சென்ட் நிலம் சொந்தமானது. தரிசு நிலங்களில் 34 ஆயிரத்து 543 ஏக்கர், 15 சென்ட் நிலம் மடங்களுக்குச் சொந்தமானது என்றும் இந்து அறநிலையத் துறை புள்ளி விவரம் கூறுகிறது.
இத்தகைய கோடானு கோடி சொத்து களை வைத்துக் கொண்டு, அதன் பெய ரால் பல்லாயிரம் மக்களை அடிமைப் படுத்தி, ஆன்மிகத்தின் பெயரால் எதை யும் செய்யலாம் என நினைக்கும் ஆதி னங்களே இது பெரியார் மண் என்பதை மறக்கவேண்டாம்.
பெரியார் விட்டுச் சென்ற பகுத்தறிவு பேராயுதத்தை (போராயுதத்தை) மங்கா மல் - மழுங்காமல் பாதுகாத்து வரும் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் தலைமையில், திராவிடர் கழகத் தோழர் கள் தங்கள் இன்னுயிரை ஈந்தேனும் மனித உரி மையை வென்றெடுப்பார்கள் என்பதை திராவிட சன்னிதானங்கள் உணர வேண்டும்.
மேலும், ஆடு நனைகிறதே என பார்ப்பன ஓநாய்கள் அழுகின்றன. ஆதி னங்களே எச்சரிக்கை! ஆரிய ஆர்.எஸ்.எஸ் சூழ்ச்சிக்குப் பலியாகாதீர்.
- த.சீ.இளந்திரையன்
No comments:
Post a Comment