பல்லக்கு விவகாரம்: தலைவர்களின் எதிர்ப்புகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 5, 2022

பல்லக்கு விவகாரம்: தலைவர்களின் எதிர்ப்புகள்

 தொல்.திருமாவளவன்

காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்ட மரபு என்ற பெயரில் பல்லக்கில் ஒருவரை அமர வைத்து 4 பேர் தோளில் சுமந்து செல்லுவது ஏற்புடையதல்ல. இதற்கு நீதிமன்றமும் தடை விதித்துள்ளது. அந்தத் தீர்ப்பையும் மதிக்கவேண்டும்.

செல்வப் பெருந்தகை 

(காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர்)

திருஞானசம்பந்தருக்கு இறைவன் பல்லக்கைக் கொடுத்தபோது, நாவுக்கரசரைப் பார்த்து இனி பல்லக்கில் ஏறமாட்டேன் என்று சபதமேற்றார். தந்தை பெரியாரின் கருத்தால் காஞ்சி சங்கராச்சாரியார் பல்லக்கில் ஏறுவதைத் தவிர்த்துவிட்டார். எனவே, பல்லக்கில் செல்லுவதை சரி என்று சொல்லுவது எவ்விதத்தில் சரியாகும்? மனிதனை மனிதன் மதிக்கவேண்டும்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன்

மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்திற்கு உலகம் முழுவதிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்ட இந்த காலகட்டத்தில், இது எங்களது பாரம்பரிய மான பழக்கம், அதை ஒருபோதும் கைவிட முடியாது என மடாதிபதி ஒருவர் அறிக்கை வெளியிட்டிருப்பது காலத்திற்கு ஒவ்வாததாகும்.

பல்லக்கில் பவனி வருவது பாரம்பரிய பழக்க மாகும். அதை ஒருபோதும் கைவிட மாட்டோம் எனக் கூறும் மடாதிபதிகள் தங்களின் மடத்து அறையில் குளிர்சாதனம் பொருத்தியிருப்பது ஏன்? குளிர்சாதனம் பொருத்தப்பட்ட விலையுயர்ந்த கார்களில் பவனி வருவது ஏன்? தொலைப்பேசி, கைப்பேசி மற்றும் கணினி, வானொலி, தொலைக்காட்சி போன்ற மிக நவீன சாதனங்களை மடங்களில் வைத்திருப்பது ஏன்? பக்தர்களுக்கு அருளுரை ஆற்றும்போது ஒலிப் பெருக்கிகளை பயன்படுத்துவது ஏன்? இவற்றை யெல்லாம் பயன்படுத்தும் போது மனிதனை மனிதர் கள் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன்?

மடாதிபதிகள் உள்பட யாராக இருந்தாலும் தாங்கள் வாழும் காலத்திற்கு ஒவ்வாத பழக்கவழக்கங் களை கைவிட்டு உலகத்தோடு ஒட்டிச் செல்ல வேண்டும். இல்லையேல் மக்களால் புறக்கணித்து ஒதுக்கப்படுவார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்..

No comments:

Post a Comment