பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிறப்பு அதிகாரி காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம் : மேனேஜர் பிரிவில் (ரிஸ்க் 40, கிரடிட் 100, கருவூலம் 5) 145 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : சி.ஏ., (கணக்கு தணிக்கையாளர்) அல்லது ஏதாவது ஒரு டிகிரியுடன் எம்.பி.ஏ., (நிதி) முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.1.2022 அடிப்படையில் கருவூலம் பணிக்கு 25 - 37, மற்ற பணிக்கு 25 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மையம் : சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்
விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ.850. தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ. 50.
கடைசிநாள் : 7.5.2022
விவரங்களுக்கு : www.pnbindia.in/Recruitments.aspx
No comments:
Post a Comment