பெரியகுளத்தில் மாநில உரிமை மீட்பு கூட்டம் சிறப்பாக நடத்த முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 31, 2022

பெரியகுளத்தில் மாநில உரிமை மீட்பு கூட்டம் சிறப்பாக நடத்த முடிவு

பெரியகுளம், மே 31-  திராவிடர் கழகம் இளைஞர் அணி, தேனி - கம்பம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 28.5.2022 அன்று காலை 10 மணிக்கு பெரியகுளம் கோவிந்தன் மயில் தாயம்மாள் மண்டபத்தில், பொதுக் குழு உறுப்பினர் மு.அன்புக்கரசன் தலைமையில் நடைபெற்றது.

மண்டல செயலாளர் கருப்பு சட்டை நடராசன், பொதுச் செய லாளர் ஜெயக்குமார், மாநில அமைப்புச் செயலாளர் செல்வம், மாநில இளைஞர் அணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் பிரபாகரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் கமல்குமார் முன்னிலையில கலந்துரையாடல் நடைபெற்றது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவ ர்கள், பெரியகுளத்தில் நடைபெறும் மாநில உரிமை மீட்பு விளக்க பொதுக்கூட்டதிற்கு வருகை புரியும் (9.6.2022இல் எழுச்சியுடன்) தமிழர் தலைவரை வரவேற்பது எனவும், 8, 9, 10, 11 குற்றாலம் பயிற்சி முகாமில் இளைஞர்களை அதிக அளவில் அனுப்புவது எனவும், ஜூலை 30 மாநில இளைஞரணி மாநாட்டிற்கு தனி வேன்களில் செல்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தேனி மாவட்ட துணை செய லாளர் சுருளிராஜ், தேனி மாவட்ட அமைப்பாளர் கண்ணன், கம்பம் மாவட்ட துணைத் தலைவர் ஜி.கும ரேசன், மாவட்ட துணைச் செயலாளர் கூடலூர் நாகராசன், மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர் நியமிக்கப் படுகிறார்கள். 

தேனி மாவட்ட செயலாளர் மணிகண்டன், தேனி மாவட்ட துணைத் தலைவர் ஸ்டார் நாகராசன், கம்பம் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல் வன், செயலாளர் சிவா மற்றும் பெரியகுளம், தேனி, போடி, கம்பம், கேகே பட்டி தோழர்கள் திரளாக வருகை புரிந்தனர்.

No comments:

Post a Comment