பட்டுக்கோட்டை,மே 5- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொண்ட நீட் தேர்வு எதிர்ப்பு தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு என்கின்ற மூன்று முழக்கங்களை முன்வைத்து பட்டுக்கோட்டை மாவட்ட கழகம் சார்பில் பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தில் ஒன்றியத்திற்கு ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்ற முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, பட்டுக்கோட்டை நகர கழகம் சார்பில் ஏப்ரல் 22ஆம் நாள் பட்டுக்கோட்டை தந்தை பெரியார் சிலை அருகில் மாவட்டத் துணைத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சின்னகண்ணு தலைமையிலும், மாவட்டத் தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன் முன்னிலையிலும் நகரத் தலைவர் பொறியாளர் சிற்பி சேகர் வரவேற்றார்.
மாநில கிராமப்புற பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் சிறப்பு சொற்பொழிவுடன் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைச்செயலாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் காளிதாசன், பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி நீலகண்டன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கருத்தாளர் இரத்தினசபாபதி, மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் பட்டுக்கோட்டை அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் தென்னவன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் புலவஞ்சி காமராஜ், சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் ஆசிரியர் ஜெகநாதன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி செயலாளர் வள்ளுவ பெரியார், அமைப்பாளர் வீரமணி பாலையன் வீரகுமார் ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமோதரன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மதுக்கூர் ஒன்றியம்
மதுக்கூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் அன்று 26.4.2022 அன்று மாலை 7 மணி அளவில் மதுக்கூர் பேருந்து நிலையத்தில் மதுக்கூர் ஒன்றியத் தலைவர் அண்ணாதுரை தலைமையில் மாவட்டத் தலைவர் அத்திவெட்டி வீரையன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் முத்து துரைராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் புலவஞ்சி காமராஜ், முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் மாணிக்கம் முன்னிலையிலும், கழக ஒன்றிய செயலாளர் அத்திவெட்டி இராஜ்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி நீலகண்டன் பட்டுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கருத்தாளர் இரத்தினசபாபதி பட்டுக்கோட்டை நகர திராவிடர் கழகத் தலைவர் பொறியாளர் சிற்பி சேகர் மதுக்கூர் ஒன்றியத் துணைத் தலைவர் சிவாஜி, மதுக்கூர் ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்
சேதுபாவாசத்திரம் ஒன்றியம்
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சொக்கநாதபுரம் கிராமத்தில். 27..04.2022 மாலை 6 மணி அளவில் கடைவீதியில் கழக ஒன்றிய தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஜெகநாதன் தலைமையிலும் மாவட்டத் தலைவர் வீரையன், மாவட்ட கழக செயலாளர் மல்லிகை சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் நல்லதம்பி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் புரவலர் விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஆசிரியர் வேலு, மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன், மாவட்ட இளைஞரணி தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரெங்கநாதன் என்ற வசி வரவேற்றார்.
மாநில கிராமப்புற பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் 90 நிமிடம் சிறப்பு சொற்பொழிவாற்றினார். தொடக்கத்தில் மந்திரமல்ல தந்திரமே என்ற நிகழ்ச்சியினை மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன் செய்து காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா. நீலகண்டன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட மேனாள் தலைவர் ஆத்மநாதன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கருத்தாளர் இரத்தினசபாபதி, நகர திராவிடர் கழகத் தலைவர் பொறியாளர் சிற்பி சேகர், பள்ளத்தூர் கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் சண்முகவேல், பேராவூரணி நகர கழக செயலாளர் சந்திரமோகன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி செயலாளர் நடராஜன், பள்ளத்தூர் கலைவாணன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய இளைஞரணி தோழர் கழனிவாசல் சந்தோஷ்குமார், திமுக பொறுப்பாளர்கள் பள்ளத்தூர் ஜெயபால், பள்ளத்தூர் பெரியவர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்றியத் தலைவர் ஆசிரியர் ஜெகநாதன் கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
பேராவூரணி
பேராவூரணி ஒன்றியம் பேராவூரணி நகரத்தில் ஆவணம் சாலை தந்தை பெரியார் சிலை அருகில். 28. 04..2022 அன்று மாலை 7 மணியளவில் பேராவூரணி ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் அரசி காய்கறி தமிழ்ச்செல்வன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் மல்லிகை சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் நல்லதம்பி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் புரவலர் விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஆசிரியர் வேலு மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன் மாவட்ட இளைஞரணி தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலையிலும் பேராவூரணி ஒன்றிய இளைஞரணி செயலாளர் செங்கமங்கலம் கவுதமன் வரவேற்புரையுடன் கூட்டம் நடைபெற்றது.
கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் 90 நிமிடங்கள் உரையாற்றினார். கூட்டத்தில் மண்டல இளைஞரணி செயலாளர் ராஜவேலு தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் உத்திராபதி, பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், அறந்தாங்கி கழக மாவட்ட இளைஞரணி தலைவர் மகாராஜா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராஜலட்சுமி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் ஜெகநாதன், பேராவூரணி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் குறிச்சி ராமச்சந்திரன், நகர செயலாளர் சந்திரமோகன், அமைப்பாளர் நீலகண்டன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரெங்கநாதன் என்கின்ற வசி, படப்பனார் வயல் பிரபு, கழனிவாசல் சந்தோஷ் குமார், பாலகிருஷ்ணாபுரம் பெரியார் பிஞ்சு பண்பாளர், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி பொறுப்பாளர் வெள்ளத்துரை, ஒப்பந்தகாரர் கவிஞர் மோகன், சித்தாதிகாடு மாவட்ட மாணவர் கழகத் தலைவர் நாடிமுத்து பாலாஜி, கார்த்திக் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தில் அனைத்து இடங்களிலும் சிறப்புரையாற்றிய கழக சொற்பொழிவாளர்கள் நீட் தேர்வு எதிர்ப்பு தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு என்ற முழக்கத்தை முன்வைத்து மிகவும் உணர்ச்சிமயமாக 90 நிமிடங்களுக்கு குறைவில்லாமல் உரையாற்றினார்.
No comments:
Post a Comment