சிலிகுரி, மே 6- மேற்கு வங்கத்துக்கு 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிலிகுரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் நேற்று (5.5.2022) குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்படும் என்று பேசியுள்ளார். அவர் பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படாது என திரிண மூல் காங்கிரஸ் கட்சி வதந்தி பரப்பி வருகிறது. கரோனா தொற்று முடிவடைந்ததும், குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும். ஊடுருவல் தொடர்வதை மம்தா விரும்புகிறாரா? ஆனால் சிஏஏ நிச்சயம் அமல்படுத்தப் படும். இதை திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் தடுக்க முடியாது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.
ஜாதி வண்ணக்கயிறுகளைக் கட்ட மாணவர்களுக்குத் தடை
பள்ளிக்கல்வித்துறை
தேனி, மே, 6- தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிந்து தங்களின் ஜாதியை அடையாளப்படுத் துவதாகவும் அதன் மூலம் பல ஜாதிக் குழுக்களாக மாண வர்கள் பிரிந்து அனைவரோடும் கலந்து பழகாத சூழல் நிலவுவதாகவும் தெரிய வருகிறது.எனவே மாணவர் நலன் கருதி தலைமை ஆசிரியர்கள் இந்தவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி மாண வர்களுக்கு இதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக்கூற வேண்டும்,
அவ்வாறு ஜாதி பிரிவினையை தூண்டுவோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்க வேண் டும். மேலும் இதுபோன்று மாணவர்கள் கைகளில் கயிறு அணி வதை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரி யர்களும், தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கீழடியில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
திருப்புவனம், மே 6- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 8ஆம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக செங்கல்கட்டுமானம் கண்டறியப்பட்டு உள்ளது.
கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு கடந்த பிப். 13ஆம் தேதி தொடங்கியது. அதன் அருகே உள்ள அகரம், கொந்தகையில் மார்ச் 30ஆம் தேதி அகழாய்வுப் பணிகள் தொடங்கின.
கீழடியில் 5 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை நீளவடிவத் தாயக்கட்டை, பாசிமணிகள், வளையல்கள், சேதமடைந்த பானைகள், மனித தலை சுடுமண் சிற்பம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டு உள்ளன.
அகரத்தில் 2 குழிகள் தோண்டப்பட்டு சுடுமண் பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. கொந்தகையில் 2 குழிகள் தோண்டப்பட்டு 21 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.
இந்நிலையில் தற்போது கீழடியில் செங்கல் கட்டு மானம் கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இப்பகுதியில் நடந்த 7 கட்ட அகழாய் வுகளில் செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டன. அதே போல் 8ஆம் கட்ட அகழாய்விலும் தற்போது முதன்முறை யாக செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment