நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, திராவிடர்கழக கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பா.பொன்னுராசன் ஆகியோர் கருத்துரையாற்றினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து பாவேந்தர் பாரதிதாசன் குறித்து சிறப்புரையாற்றினாணீர். தோழர்கள் பொன் பாண்டியன், சி.ரெகு முத்துவைரவன், மற்றும் கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் ஆர்வமு டன் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கியும் பாவேந்தரின் நூல்களை பரப்பியும் பாவேந்தர் பிறந்த நாளை கொண்டாடினர். தோழர் குமரிச் செல்வன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment