சென்னை, மே 6 - வேளாண்மை துறை வளர்ச்சிக்காக வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சோனாலிகா நிறுவனம் டிராக்டர்களை - உழவு மற்றும் பிற பணிகளுக்கானவற்றை பிரத்யேகமாகத் தயாரித்து அளிக்கிறது. உலகம் முழுவதும் விவசாயப் பணிகளின் அருமை உணரப்பட்டுள்ளதால், பன்னாட்டு அளவில் இந்நிறுவன டிராக்டர் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்நிறுவன டிராக்டர் ஏற்றுமதி இரு மடங்கு அதிகரித்துள்ளது. அத்துடன் வேளாண் மக்களின் நம்பகத்தன்மையையும் அந்தந்த பிராந்தியங்களில் இந்நிறுவனம் பெற்று வருகிறது.
நிறுவனத்தின் மிகச் சிறப்பான செயல்பாடு குறித்து இதன் இணை நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் கூறுகையில், இந்த நிதி ஆண்டின் (2022-2023) தொடக்க மாதமான ஏப்ரலில் அதிகபட்சமாக 12,328 டிராக்டர்களை விற்பனை செய்திருப்பதோடு முன்னெப்போதையும் விட அதிகபட்ச உள்நாட்டு விற்பனையும் எட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு விற்பனையில் 43.5% சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இத்துறையின் வளர்ச்சி 41 சதவிகித அளவுக்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதையும் தாண்டி விற்பனை வளர்ச்சி உள்ளது.
No comments:
Post a Comment