பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் சார்பில் ஜாதி, மத மறுப்புத் திருமணத்துக்கான "இணை தேடல்" பெருவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் சார்பில் ஜாதி, மத மறுப்புத் திருமணத்துக்கான "இணை தேடல்" பெருவிழா

‘மன்றல்’ நிகழ்ச்சியில்  குடும்பத்தினருடன் குவிந்த இணை தேடுவோர்

சென்னை,மே30- ஜாதி, மத மறுப்புத் திருமணத்தை ஊக்குவித்து பேதமில்லா பெருவாழ்வுக்கான சுயமரியாதைச் சமூகம் அமைந்திட பெரியார் சுயமரி யாதைத் திருமண நிலையம் இயங்கி வருகிறது.

திராவிடர் கழகத்தவர் மட்டுமல் லாமல், ஜாதி, மத மறுப்பு உணர்வு கொண்டோரை இணைக்கின்ற பால மாக  பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் ஏற்பாட்டில் ’மன்றல்’ நிகழ்ச்சி நேற்று (29.5.2022) ஞாயிறு காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற்றது.

சென்னை பெரியார் திடலில் நடிக வேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் ஜாதி, மத மறுப்பு திருமணத்துக்கு இணை தேடல் பெருவிழா ‘மன்றல்’ நிகழ்ச்சி எழுச்சியுடன் நடைபெற்றது.

இளைய சமூகத்தினரிடையே ஜாதி, மத உணர்வுகளுக்கு இடமில்லை என் பதை பறைசாற்றும் வண்ணம் ‘மன்றல்’ நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் குடும்பத் தினர், நண்பர்களுடன் பங்கேற்றனர்.

நிகழ்வை கழகப் பிரச்சார செய லாளர் வழக்குரைஞர் அருள்மொழி சுவையான செய்திகளைக் கூறி தொடங்கி வைத்தார். 

நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் தலைமையில்  இணையேற்பு    விழா ஒன்று நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.

மன்றல் நிகழ்ச்சியினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி தோழர்கள் ஒத்துழைப்போடு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.


பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் அவர்களுக்கு சுதந்திர சிந்தனை வாய்ப்பு அளிக்கப் பட்டது. மேடையேறி தங்களின் விருப்பத் தேர்வுகளை எவ்வித தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாகக் கூறு கின்ற வாய்ப்பு ‘மன்றல்’ நிகழ்ச்சியில் வெளிப்பட்டது.

இணையரைத் தேர்வு செய்வதில் ஜாதி, மத பேதங்களுக்கும், ஜாதகத் துக்கும்  இடமில்லை என்று பகுத்தறிவு, சுயமரியாதைச் சிந்தனை மேலோங்க தங்களின் சிறப்பம்சங்களை எடுத்துக் கூறியதுடன், தங்களின் விருப்பங்களை யும் தயங்காமல் எடுத்துக் கூறினார்கள்.

'மன்றல் இணை தேடல்' பெருவிழா வில் 165 பெண்கள் உள்பட 462 பேர் பங்கேற்றனர்.

ஜாதி மறுப்பு மணம் புரிந்துகொள்ள விருப்பம் தெரிவித்து 61 பெண்கள், 108 ஆண்களும், ஜாதி, மத மறுப்பு மணம் புரிந்து கொள்ள விருப்பம் தெரிவித்து 78 பெண்கள், 137 ஆண்களும், மாற் றுத்திறனாளிகளிலிருந்து 2 பெண்கள், 4 ஆண்களும், மண முறிவு பெற்றவர் களிலிருந்து மணம் புரிந்து கொள்ள 17  பெண்கள், 36 ஆண்களும், துணையை இழந்தவர்களிலிருந்து 7 பெண்கள், ஆண்கள் 12 பேர் என மொத்தத்தில் மன்றல் நிகழ்ச்சி மூலம் இணையைத் தேட வருகை புரிந்தவர் களில் 165 பெண்கள், 297 ஆண்கள் ஆக மொத்தம் 462 பேர் மன்றல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் நடத்திய மன்றல் நிகழ்ச்சிக்கு இயக்கத்தைக் கடந்தும், நாத்திக, ஆத்திக பேதமின்றியும், பகுத்தறிவு, சுயமரியாதை உணர்வுடன் 462 பேர் தங்களின்  இணையைத் தேடக் குடும்பத் தினர், குழந்தைகள், நண்பர்களுடன் குவிந்தனர். பெரியார் திடல் வளாகமே மக்கள் திரளில் மாநாடுபோன்று காணப்பட்டது.

பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில் அரங்குகள் அமைக் கப்பட்டு, இணையைத் தேட விழைந் ததோரின் எண்ணவோட்டத்துக்கேற்ப வழிகாட்டல், உதவிகள் அயராது நாள் முழுவதும் அளிக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது. 

மாலை 6 மணி வரை நடைபெற்ற நிகழ்வினை பிரின்சு என்னாரெசு பெரியார் நன்றி கூறி முடித்து வைத்தார். 



No comments:

Post a Comment