சென்னை,மே31- சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை யில் 29.5.2022 அன்று ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.
அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் முழு உடல் பரி சோதனை மய்யம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் தொடக்க விழா நிகழ்ச்சி ஞாயிற் றுக்கிழமை ஸ்டான்லி மருத்துவ மனையில் நடைபெற்றது
கல்லூரி முதல்வர் மருத்துவர் பி.பாலாஜி தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு முழு உடல் பரிசோ தனை மய்யம், ரூ. 2.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மார்பக புற்றுநோய் கண்டறியும் நவீன உபகரணம், ரூ.25 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம், ரூ. 75 லட்சம் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் உள்ளிட்டவற்றை அமைச்சர் சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.
மேலும் கரோனா தொற்று பரவல் காலத்தில் தங்களது சிறப்பான பங்களிப்பு மற்றும் தன்னலமற்ற சேவையாற்றிய அமைப்புசாரா நிறுவனங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட் டோருக்கு பாராட்டுச் சான் றிதழ் மற்றும் நினைவுப் பரிசை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் நடை பெற்ற பணிஓய்வு பிரிவு உபசார விழாவில் சுமார் 30 ஆண்டு காலம் ஸ்டான்லி மருத்துவ மனையில் பணியாற்றி ஓய்வு பெறும் உறைவிட மருத்துவ அதிகாரி மருத்துவர் ரமேஷ் மற்றும் 12 மருத்துவர்களுக்கு அமைச்சர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.
அப்போது அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியது,
வடசென்னையில் வாழும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் பெருமளவில் வசித்து வருகிறார்கள். இவர் களின் நலன் காக்கும் வகையில் ரூ. 1,000 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் ஸ்டான்லி மருத்துவ மனையில் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மிகக் குறைந்த கட்டணத்தில் நீரிழிவு ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, தைராய்டு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சார்ந்த நோய்கள் போன்றவற்றை தொடக்கத்திலேயே கண்ட றிந்து உரிய சிகிச்சை அளிக்க ஏதுவாக இந்த மய்யம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும் இத்திட் டத்தை அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செயல்படுத்திட முயற்சிகளை மேற்கொள்வோம். அதிகரித்து வரும் மார்பக புற்றுநோயை எளிதில் கண் டறியும் வகையில் அதிநவீன கருவி ரூ. 2.50 கோடி செலவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
ஸ்டான்லி மருத்துவக் கல் லூரியில் அமைந்துள்ள நூலகம் மாணவர்கள், மருத்துவர்கள் படித்துப் பயன்பெறும் வகையில் குளிரூட்டப்பட்ட அறையுடன் ரூ. 75 லட்சம் செலவில் அதிநவீன முறையில் சீரமைக்கப்பட்டுள் ளது. ஸ்டான்லி மருத்துவமனை யில் பணியாற்றுவது என்பது ஒவ்வொரு மருத்துவர்களின், மருத்துவ பணியாளர்களின் விருப்பமாக உள்ளது. இங்கு பணியாற்றி ஓய்வு பெற உள்ள மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் ஓய்வு காலத்தை கழித் திட வாழ்த்துகிறேன் என்றார் அமைச்சர் மா சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment