மலேசியா, பகாங் மாநிலம், மெண்டகப் நகரில், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், ஆசிரியர்
கி.வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களுடன் புலவர் குழந்தையின் திருக்குறள் உரை நூலை தோட்ட நிர்வாகிகள் மன்ற தலைவரும், பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவருமான (மலேசியா) மு.கோவிந்தசாமி சுமார் அய்ம்பது தோழர்களுக்கு அன்பளிப் பாக வழங்கினார். பெரியாரின் மலேயா வருகை மற்றும் அய்யாவின் திருக்குறள் மாநாடு - பற்றிய செய்திகளை தமது உரையில் குறிப்பிட்டார்கள். இந்த நிகழ்வில் பெரியாரியல் சிந்தனையாளர்கள், பொது அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர். பெரியார் பெருந்தொண்டர் மெண்டகப் சின்னய்யா இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்தார்.
குமரிமாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் விடுதலை நாளிதழுக்கு சந்தாவினை மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார்
No comments:
Post a Comment