பாரதக் கதையின் சூத்ர தாரி யார்? கிருஷ்ணன், அவ னொரு இடைச்சாதி அதாவது சூத்திரன்! பார்ப்பனீயம் தன தாக்கிக் கொண்டது!
புத்தியை பிரதானமாக கொண்டு வளர்ந்த மதம் புத்த மதம்! இந்தியவில் தோன்றி உலகெங்கும் பரந்து விரிந்த பவுத்தம், இந்து மதத்திற்கு போட்டியாக இருந்ததால் அதை பிராமணீயம் உள்ளி ழுத்துச் செரித்து விட்டது!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன பொய்யாமொழிப் புலவன் அய்யன் திருவள்ளுவரை தனதாக்க முயன்றதன் விளைவுதான் அவரது படத்தை காவியாக்கி அதற்கு பூணூலும் போட்டு விட்டது, தமிழர் சிலர் விழித்துக் கொண்டதால் பிழைத்தது நம் வள்ளுவம்!!
பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கரை ஏற்க முடியாததால் அவரை, அவரது புகழை அழிக்க நினைத்த ஆர்.எஸ்.எஸ். அவரது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது, பஞ்சசீலத்தை கொண்டாடுகிறது என்றால் என்ன காரணம் காவிகளின் “பஞ்ச் ஆப் தாட் “ அய் அதாவது மனு (அ)தர்மத்தை இங்கே நடைமுறைப்படுத்தத்தான்!
கருப்பும் நீலமும் இணைந்திருக்கும் வரை அது முடியாது..!
நாத்திகம் பேசிய திராவிட இயக்கத்தை சேர்ந்த கவியரசர் கண்ணதாசனை ஆலிங் கனம் செய்யவே அர்த்தமுள்ள இந்துமதம் எழுதத் தூண்டியது பார்ப்பனீயம்! ஆனால் அதையும் மீறி இயேசு காவியம் எழுதிய கண்ணதாசனை ஆரியத்தால் செரிக்க முடியவில்லை!
அந்த வரிசையில் இன்றைக்கு பாரப் பனீயத்தின் கோரப்பிடியில் சிக்கியிருப்பது யார் தெரியுமா?
சங்கீதம் என்றாலே தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் ஆகிய சங்கீத மும்மூர்த்திகள் தான் என்று தொடை தட்டித் திரிந்த கூட் டத்தை அடுத்து தமிழிசை மூவர் அல்லது தமிழிசை மும்மூர்த்திகள் அல்லது ஆதி மும்மூர்த்திகள் என்போர் தமிழிலேயே பாட்டெழுதி, தமிழிலேயே பாடித் தமிழி சையை வளர்த்த, அருணா சலக் கவிராயர், முத்துத் தாண் டவர் மற்றும் மாரிமுத்தாப் பிள்ளை எனும் மூன்று பெரு மக்கள் ஆவர்...
இந்தத் தமிழிசை மும்மூர்த் திகளின் வாரிசாக சேரியிலி ருந்து பொதுஉடைமைத் தத் துவத்துடன் பூபாளம்பாடி வந்த பாவலர் பரம்பரை!! தலைவர் கலைஞர் அவர்களால் இசைஞானி என்ற ழைக்கப்பட்ட இராசய்யா என்ற இளைய ராஜா..
அவருடைய திறமையையும் புகழை யும் தமிழர்களின் மத்தியில் அவரது இசைக்கு இருக்கும் முக்கியத்துவத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத சங்கிக் கூட்டம் தமிழர்களாலேயே வெறுக்கப்பட வைக்கும் முயற்சிதான் ஆரியத்திற்கே உரிய இந்த பிரித்தாளும் சூழ்ச்சி!
இசை தவிர வேறு எதுவும் அறியாத இளையராஜா இசைந்து விட்டார் ஆரியத் தின் சூழ்ச்சி வலையில் விழுந்துவிட்டார்!
அனைத்தையும் ஆலிங்கனம் செய்த ஆரியம் முயன்று பார்த்து முனை மழுங்கிப் போனது அய்யா தந்தை பெரியாரிடம் மட்டுமே! எப்படி? பத்து அவதாரம் எடுத்த பரம்பொருளின் பதினோராவது அவதாரம் தந்தை பெரியார் என்று பிரச்சாரம் செய் வான் எனவே எனது சிலையின் பீடத்தில் கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை என்று எழுதச் சொன் னார்!
அங்கு தான் பெரியாரிடம் மரண அடி வாங்கியது பார்ப்பனீயம்!!
தமிழர்களே தமிழர்களே விழித்திருப் போம்! திராவிடம் காப்போம்!!
No comments:
Post a Comment