மயிலாடுதுறை, மே 7- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்களின் கல் லூரி ஆசிரியர் பேராசிரி யர் அ.சுப்பையா அவர் கள் 4.5.2022 அன்று காலை மயிலாடுதுறையில் தனது 101 வது வயதில் இயற்கை எய்தினார்.
செய்தி அறிந்த கழக தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் பேராசிரியரின் மறைவிற்கு இரங்கல் அறிக்கை வெளியிட்டார்.
மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழ கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேக ரன், செயலாளர் கி.தள பதிராஜ், அமைப்பாளர் ஞான.வள்ளுவன், துணைச்செயலாளர் அரங்க.நாகரத்தினம், நகர தலைவர் சீனி.முத்து, துணைத் தலைவர் பூ.சி. காமராஜ் ஆகியோர் மயிலாடுதுறை, பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினர். தமிழர் தலை வரின் இரங்கல் அறிக்கை வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment