செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 31, 2022

செய்தியும், சிந்தனையும்....!

கேள்வி: 'துக்ளக்' விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்தின் முழுப் பாடலும் பாடப்பட்டதுபற்றி?

பதில்: தி.மு.க. வெட்டித் திருத்திய தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடிப் பாடி, மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய முழு தமிழ்த் தாய் வாழ்த்தை மறந்துவிடக் கூடாதல்லவா, அதனால்தான்.

- 'துக்ளக்', 1.6.2022

சிந்தனை: அப்படியா சேதி?

''ஆரியம் போலுலக வழக் கொழிந்து சிதையா வுன்

சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!''

என்ற வரிகளையும் சேர்த்துப் பாடினார்களா?

பரவாயில்லை; காலந்தாழ்ந்தாவது ஆரிய சமஸ்கிருதம் செத்த மொழி என்று ஒப்புக்கொண்டு விட்டனர்.

சம்மன் இல்லாமல் ஆஜர்

* கோவில் பணிக்கென்று ரூ.34 லட்சம் வசூல் மோசடி செய்த பி.ஜே.பி. பிரமுகர் கைது - பி.ஜே.பி. மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா கண்டனம்.

>> 'எங்களப்பன் குதிருக்குள் இல்லை!'

என்ன பாதுகாப்போ?

* நெருக்கடி நிலை வந்தபோது நாட்டைப் பாதுகாத்தது ஆர்.எஸ்.எஸ்.

- கருநாடக பி.ஜே.பி. தலைவர் 

நளின்குமார் நட்டிவ்

>> அண்டர் கிரவுண்டினர் ஆனதுதானே!


No comments:

Post a Comment