ஏட்டு திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 2, 2022

ஏட்டு திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

மத, ஜாதி ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வேலையை பாஜக ஆர்.எஸ்.எஸ். துவக்கியுள்ளது. இதைப் போன்ற தாக்குதலை அவர்கள் தொடர்வார்கள் என ராஜஸ்தான் முதல்வர் கேலாட் எச்சரிக்கை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

ஹிந்துத்துவாவை முன்னிறுத்தி சிவசேனாவின் தலைவர் மறைந்த பாலாசாகேப் தாக்கரேவை பாஜக ஏமாற்றியது என உத்தவ் தாக்கரே கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

கோவை பி.என்.புதூரில் உள்ள சாலையில் தந்தை பெரியாரின் பெயரில் ராமசாமி என்பதற்குப் பதிலாக ‘ராமஸ்வாமி’ என எழுதப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், பெரியார் ராமசாமி தெரு என மா நகராட்சி திருத்தம் செய்தது.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment