கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நிலுவை வழக்குகள்: வேறு மாவட்டங்களுக்கு மாற்றி உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 31, 2022

கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நிலுவை வழக்குகள்: வேறு மாவட்டங்களுக்கு மாற்றி உத்தரவு

கோவை,மே31- தமிழ்நாடு முழு வதும் மாவட்ட தலைநகரங்களில் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் சென்னையிலும், அதன் கிளை மதுரையிலும் இயங்கி வருகிறது. காலாவதியான பொருட்கள் விற் பனை, கூடுதல் விலை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவை குறைபாட்டால் பாதிக்கப்படுவோர் நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெறலாம்.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான இந்த ஆணையங்களில், பாதிக்கப்பட்டோர் நேரடியாக மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறவும் வழிவகை உள்ளது. இதில், நிவாரணம் கோரும் தொகை ரூ.50 லட்சம் வரை இருந்தால், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையமும், ரூ.50 லட்சத்துக்கு மேல் ரூ.2 கோடி வரை உள்ள வழக்குகளை மாநில நுகர்வோர் ஆணையமும் விசாரிக் கும். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி நுகர்வோரின் புகார் மனு அல்லது மேல்முறையீட்டு மனுவை 90 நாட்களுக்குள் விசா ரித்து முடித்து வைக்க வேண்டும். ஆனால், சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் வழக் குகள் நிலுவை அதிகமாக உள்ளது. இதனால் உரிய காலத்துக்குள் மனுதாரர்களுக்கு தீர்ப்பு கிடைப் பதில்லை.

கோவையில் மட்டும் தற்போது வரை 1,500-க்கும் மேற்பட்ட வழக்குகளும், 200-க்கும் மேற்பட்ட உத்தரவு நிறைவேற்று மனுக்களும் (இபி) நிலுவையில் உள்ளன. 

எனவே, கோவையில் நிலு வையில் உள்ள வழக்குகளின் எண் ணிக்கையை குறைக்கும் வகையில் சேலம், ஈரோடு, உதகை, திருப்பூர், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங் களுக்கு வழக்கு களை மாற்ற உத்தரவிடப்பட் டுள்ளது.

இதுதொடர்பாக, நுகர்வோர் குறைதீர் ஆணைய அதிகாரிகள் கூறும்போது, “மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தர வுப்படி கடந்த 2013, 2014ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு, வாதங்கள் தொடங்கிய வழக்குகள், மேல்முறையீடு செய்து தடையாணை பெற்ற வழக்குகள் தவிர்த்து நிலு வையில் உள்ள வழக்குகள் சேலத் துக்கும், 2015ஆம் ஆண்டு வழக்குகள் நீலகிரிக்கும், 2016ஆம் ஆண்டு வழக்குகள் ஈரோட்டுக்கும், 2017ஆம் ஆண்டு வழக்குகள் திருப்பூருக்கும், 2018ஆம் ஆண்டு வழக்குகள் நாமக்கல்லுக்கும் மாற்ற உத்தர விடப்பட்டுள்ளது. 

இவ்வாறு வழக் குகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து மனுதாரர்கள், எதிர்மனு தாரர்கள், அவர்கள் தரப்பு வழக் குரைஞருக்கு தகவல் தெரிவிக்கப் படும்.

மேலும், இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளை 3 மாதங்களுக்குள் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ, மனு தாரர்கள், எதிர்மனுதாரர்களுக்கு எது சவுகரியமோ அந்த வகையில் விசாரித்து தீர்ப்பு வழக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது” என்றனர்.


No comments:

Post a Comment