கும்பகோணம் திராவிடர் கழகம் வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 3, 2022

கும்பகோணம் திராவிடர் கழகம் வெற்றி

கும்பகோணம் கோவில்களில் 20.10.1950இல் நடக்கவிருக்கும் விஜயதசமி திருநாளில் பல கோவில்களில் இருந்து புறப் படும் வாகனங்களைப் பாமர மக்களைக் கொண்டு சுமக்கச் செய்து அதில் அர்ச்சக பார்ப்பனர்களை ஏற்றி வைத்து ஊர்வலம் வருகிற பழங்கால அநாகரீக பழக்கம் வகுப்பு துவேஷத்திற்கு இடம் தருமென்றும், அத னால் திராவிட மக்களின் மனம் புண்படும் என்றும் கும்பகோணம் நகர திராவிடர் கழகம் கருதி அதை தடுக்க வேண்டுமென்று அரசாங் கத்திற்கு அது சம்பந்தப்பட்ட கோவில் நிர் வாகஸ்தர்களுக்கு 11.10.1950 மற்றும் 18.10.1950இல் இரண்டு அறிக்கைகள் விடுத்திருந்தது.

இதனால் இந்நகரில் ஒரு பெரிய பரபரப்பு ஏற்பட்டு இந்நகர் திராவிட வகுப்பைச் சார்ந்த பெருவாரியான மக்கள் இதைத் தடுப்பதற்கு ஆதரவு கொடுக்க முன்வந்ததை கோவில் நிர்வாகஸ்தர்கள் உணர்ந்து அவர்கள் ஒன்றுகூடி அர்ச்சகர்களையோ அல்லது எந்த பார்ப்பனரையோ ஏற்றக் கூடாது என்று தடை செய்து நிறுத்தி விட்டது.

அதற்கு  இணங்க 20.10.1950இல் ஊர்வலம் வந்த 25 கோவில்களுக்கு சம்பந்தப்பட்ட வாகனங்களில் யாரும் ஏறாமலேயே ஊர்வலம் வந்ததை திராவிட மக்கள் அனைவரும் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

இதுவரை பன்னெடுங்காலமாக ஒவ்வொரு வருடமும் இந்த 25 கோவில்களிலும் ஒவ்வொரு வாகனத்திலும் அர்ச்சகர், குடைபிடிப்பவர், வெண் சாமரம் வீசுபவர்கள் என்கின்ற பெயரால் சுமார் 4 பேர்களையாவது ஏற்றி மதத்தின் பெயரால் பவனி வருவது வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த வருடம் யாரும் ஏறாமலேயே இந்த உற்சவம் நடைபெற்றது சமுதாயத் துறையில் ஒரு மாபெரும் புரட்சியாகும்.

- 'விடுதலை' 21.10.1950

No comments:

Post a Comment