நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ‘கேட்' மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் முறையை மாற்றிடுக! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 6, 2022

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ‘கேட்' மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் முறையை மாற்றிடுக!

பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை, மே. 6- தமிழ்நாட்டில், கட லூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறு வனத்தில், பட்டதாரி நிருவாகப் பயிற்சியாளர் பணிக்கு நிணீtமீ மதிப் பெண்கள் அடிப்படையில் பணி யாளர்களைத் தேர்வு செய்யும் முடிவினை மாற்றிட வேண்டு மென்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், பிரதமர் மோடிக்கு நேற்று (5-.5-.2022) கடிதம் எழுதி யுள்ளார். 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC India Ltd) 300 பட்டதாரி நிருவாகப் பயிற்சியாளர் களை (Graduate Executive Trainee) GATE நிகிஜிணி தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்திட உத்தேசித்துள்ள தாகவும், இது கடந்த காலங்களில் பணி யாளர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையிலிருந்து மாறுபட் டுள்ளது என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், கடந்த காலங்களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்க நடவடிக் கைகளுக்காக நிலங்களை வழங்கியவர் களின் குடும்பத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, பட்டதாரி நிருவாகப் பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு பணியாளர்களைத் தேர்வு செய் யும்போது முன்னுரிமை வழங்கப் பட்டு வந்துள்ளதை தனது கடிதத் தில் சுட்டிக் காட்டியுள்ளார். 

தற்போது, என்.எல்.சி.-யின் சுரங்க நடவடிக்கைகளுக்கு நிலம் கணிசமான அளவிற்குத் தேவைப் படும் சூழ்நிலை உள்ளதைக் குறிப் பிட்டுள்ள முதலமைச்சர் அவர் கள், அவ்வாறு தேவையான நிலங் களைக் கையகப்படுத்தும்போது, அவர்களின் வாழ்வாதாரம் முற் றிலும் பாதிக்கப்படுவதால், நிலங் களை வழங்கும் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்ற நியாயமான கோரிக்கை உள்ளூர் மக்களிடையே எழுந்துள்ளதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி, இதனைக் கருத்தில் கொண்டு, என். எல்.சி. நிறுவன சுரங்கப் பணிகளுக் காக நிலம் மற்றும் வீட்டுமனைகளை வழங்கியவர்களுக்கு, பட்டதாரி நிருவாகப் பயிற்சியாளர் உள் ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய் யும்போது முன்னுரிமை வழங்கப் பட வேண்டும் என்று தான் கருது வதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், என்.எல்.சி. நிறுவனத் தில் தற்போது உத்தேசிக்கப்பட் டுள்ள பணி நியமனமானது GATE மதிப்பெண்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்ற திடீர் அறிவிப்பு, நிகிஜிணி தேர்வை எழுதாத உள்ளூர் விண்ணப்பதாரர்களை பாதிப்படையச் செய்வதோடு, அவர்களுக்கான வாய்ப்பைப் பறிப் பதாக அமையும் என்று தனது கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். 

எனவே, பட்டதாரி நிருவாகப் பயிற்சியாளர் பணிக்கு GATE  மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் முடிவினை மாற்றிட வேண்டு மென்றும், தற்போதைய பணியிடங்கள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளின் போது, என்.எல்.சி. நிறுவனம் தகுதித் தேர்வை நடத்திட வேண்டு மென்றும், அவ்வாறு பணியாளர் களைத் தேர்வு செய்யும்போது, என்.எல்.சி. நிறுவனத்திற் காக நிலங்களை வழங்கிய வர்களுக்கு முன்னுரிமை அளிக்க வழிவகை செய்ய வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டு உள்ளார்.  இது குறித்து உரிய அறி வுரை களை ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சகத்திற்கு வழங்கிட வேண் டுமெனவும் இந்திய பிரதமரை முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment