சென்னை,மே 7- தமிழ் நாட்டில் நடப்பு ஆண்டில் 10 கல்லூரிகளில் பி.எச்டி., ஆய்வுப் படிப்புகள் தொடங் கப்பட உள்ளதாக உயர் கல்வித் துறைஅமைச்சர் முனைவர் க.பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் 5.5.2022 அன்று கேள்வி நேரத்தின்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி பதில் அளித்து பேசியதாவது:
பொதுவாக உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் கல்லூரி அல்லது கல்லூரிகளில் புதிய படிப்புகள் தொடங்குவது குறித்து கேட்கின்றனர். இந்த ஆண்டு 10 கல்லூரிகளில் பிஎச்டி படிப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் உறுப்பினர் ரவி, தனது தொகுதியில் உள்ளகல்லூரியில் இட வசதி, பேராசிரியர்கள் இருப்பதாக கூறியுள்ள நிலையில், அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படும். தனியார் கல்லூரிகளில் இடைநிற்கும் மாணவர்கள் பாதிஅளவு கட்டணத்தை செலுத்தி, சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
இதுபோன்ற சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணுமாறு, கல்லூரிகளுக்கு நாங்களும் அறிவுறுத்துகிறோம்.
-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment