மானாமதுரையில் பெரியார் புத்தகச் சந்தை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 31, 2022

மானாமதுரையில் பெரியார் புத்தகச் சந்தை

மானாமதுரை பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற பெரியார் நகர்வு புத்தகச் சந்தை நிகழ்விற்கு மாவட்ட தலைவர் வழக்குரைஞர் ச.இன்பலாதன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் ச.அனந்தவேல் வரவேற்று பேசிட இளையான்குடி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். ம.தி.மு.க.நகர செயலாளர் அசோக், சி.பி.எம். ஒன்றிய செய லாளர் ஆண்டி, சி.பி.எம்.நகர செயலாளர் விஜயகுமார் உள் ளிட்டோர் நூல்களை பெற்றுக் கொண்டனர்.

மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன், பொதுக்குழு உறுப்பினர் வேம்பத்தூர் செயராமன், சிவகங்கை நகர தலை வர் இர.புகழேந்தி, சிவகங்கை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ.நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரூ 5695/- க்கு புத்தகங்கள் விற்பனையானது.

No comments:

Post a Comment