சென்னை, மே 3- பாடப் புத்தகத்தில் ஒன்றிய அரசு பெயர், முதலமைச்சர், ஆளு நர் அதிகாரம் உள்ளிட்ட அம்சங் களில் திருத்தங்கள் மேற் கொள்ளப்பட உள்ள தாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி யில் 1 முதல் 12ஆம் வகுப்புக் கான பாடத்திட்டம் 2018ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. தற் போது அந்த பாடத்திட்டத் தில் சில திருத்தங்கள் மேற் கொள்ள முடிவு செய்யப்பட்டி ருந்தது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
திமுக ஆட்சிப் பொறுப் பேற்ற பின்னர் மத்தியய அர சின் பெயரை ‘ஒன்றிய அரசு’ என்று மாற்றி அழைத்து வரு கிறது.
அந்த நடைமுறையை பள்ளி பாடத்திலும் மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு அறி வுறுத்தியது. அதன்படி மத்திய அரசு என்ற வார்த்தை ‘ஒன் றிய அரசு’ என்று பாடப் புத்தகங்களில் திருத்தப்பட உள்ளது. மேலும், 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம் பெறுள்ள ஆளுநர், முதலமைச் சரின் அதிகாரம் குறித்த தகவல் களையும் மாற்றுவதற்கு முடி வாகியுள்ளது.
இதுதவிர மொழி வாழ்த் துப் பாடல், செம்மொழி தமிழ் மாநாட்டுக்காக மறைந்த முதலமைச்சர் கலைஞர் எழு திய பாடல் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட உள்ளன. இவை வரும் கல்வியாண்டில் வழங் கப்பட உள்ள புத்தகங்களில் இடம்பெற உள்ளன. இதன் விவரங்களை தமிழ்நாடு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி யுள்ளோம். அனுமதி கிடைத்த வுடன் பணிகள் மேற்கொள் ளப்படும்'' என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment