கோவை - அரசு நிகழ்ச்சியில் முதலில் ஹோம ஸ்லோகமாம்
தமிழ்த் தாய் வாழ்த்து இரண்டாவது இடத்திலாம்!
கோவை, மே 6 கோயம் புத்தூரில் ஒன்றிய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கணபதி ஹோம ஸ்லோகம் முதலில் பாடப்பட்டு பின்னர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சின்னியம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தேசிய கயிறு வாரியம் சார்பில் 2 நாள்கள் தேசிய கயிறு தொழில் முனைவோர் மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழ் நாடு, கேரளா, கருநாடகா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கயிறு சார்ந்த தொழில்களில் ஈடு பட்டு வரும் தொழில் முனை வோர் கலந்து கொண்டுள்ளனர்.
இம்மாநாட்டில், கயிறு தொழிலை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற் கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதே போல் கடந்த 4 ஆண்டு களில் சிறந்த முறையில் தொழி லில் ஈடுபட்ட தொழில் முனை வோர்களுக்கு விருதுகள் வழங் கப்பட்டு பாராட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே, இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா, தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கயிறு வாரிய தலைவர் குப்பு ராமு, கோவை தெற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்
இவ்வகை நிகழ்ச்சிகளில் சமஸ்கிருத பாடல் பாடுவது மூலம் தமிழ்நாட்டை எப்போ துமே மதவாதப் பதற்றத்தோடு வைத்திருப்பது ஒன்றே ஒன்றிய அரசின் நோக்கமாக உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் நடந்த ஒன்றிய அரசு தொடர் பான மாநாடுகளில் நாட்டுப் பண் மட்டுமே பாடப்பட்டு வந்தது, தமிழ்நாட்டில் திரா விட முன்னேற்றக்கழக ஆட்சி வந்த பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக்கப் பட்டதால் தமிழ்த்தாய் வாழ்த் தைப் பாடுவதற்கு வேண்டா வெறுப்பாக ஒன்றிய அரசின் தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்து வந்தனர். இந்த நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டு அது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஒன்றிய அரசின் தமிழ்நாட்டு நிகழ்ச் சியில் கணபதி ஹோம ஸ்லோ கம் சமஸ்கிருதத்தில் பாடப் பட்டுள்ளது. அதுவும் தமிழ் நாட்டு அமைச்சர் இருக்கும் போது பாடப்பட்டதென்பது மீண்டும் தமிழ்நாட்டு மக் களின் உணர்வுகளைக் கேலி செய்யும் வகையிலேயே ஒன்றிய அரசு நடந்து கொள்கிறது என்பதை உறுதியாக்குவதாக உள்ளது.
No comments:
Post a Comment