கும்மிருட்டிலும் ஒளிப்படம் மற்றும் காணொளிக் காட்சிகளை எடுக்க உதவுபவை, நைட் விஷன் கேமராக்கள். ஆனால், அவை பிடிக்கும் படங்கள் பெரும்பாலும் பூதங்கள் போன்ற உருவங்களாகவே இருக்கும். உருவத் தெளிவு இருந்தாலும், வண்ணங்களை அவை படம் பிடிப்பதில்லை.
அண்மையில் 'டூயோவோக்ஸ் மேட் புரோ' வெளியிட்டுள்ள இரவுப் பார்வைக் கருவி, சோனியின் ஒளி உணரி சில்லுகளைப் பயன்படுத்தி, இரவுக் காட்சிகளை வண்ணத்தில் படம் பிடிக்கும்படி செய்துள்ளது.
கண்ணங்கரேல் இருட்டில் கிளிக் செய்த காட்சிகள்கூட, ஏதோ, பட்டப் பகலில் எடுக்கப்பட்ட காட்சி போல தெளிவாகவும், வண்ணமயமாகவும் உள்ளன.
குறைந்த ஒளி தொழில்நுட்பத்தின் மிக அண்மைக்கால முன்னேற்றங்களும், எடுக்கப்பட்ட காட்சிகளை செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம் செம்மைப்படுத்தும் முறையும் டூயோவோக்ஸ் மேட் புரோ கேமராவில் பொருத்தப்பட்டுள்ளன. எனவே தான் இரவை பகலாகவும், வண்ணமயமாகவும் காட்டும் நுட்பம் கைகூடியுள்ளது.
இந்த கேமரா மூலம் இனி இரவு நேர மலையேற்றம், கானக உலா போன்றவற்றின்போது ஒளிமிக்க வண்ணப்படங்களை எடுக்கலாம்.
அது மட்டுமல்ல, பறவைகள், விலங்குகள் இரவு நேரத்தில் படம்பிடிக்கப்பட்டாலும் வண்ணமயமாக இருக்கும் என்றும் சொல்லலாம். இந்த புதிய கேமராவின் தொடக்க விலை 53 ஆயிரம் ரூபாய் முதல் இருக்கும் என்று தெரி
கிறது. இரவு நேர படப்பிடிப்பு உற்சாகிகளுக்கு இந்த விலை ஒரு தடையாக இருக்காது.
No comments:
Post a Comment