70 விழுக்காடு மக்களுக்கு ஆங் கிலம் தெரிந்திருந்தாலும் நாட்டின் 4 தேசிய மொழிகளில் ஒன்றிலாவது நல்ல புலமை பெற்றிருந்தால் மட் டுமே குடியுரிமை என்பது சுவிட்சர் லாந்தின் சட்டம்.
சுவிட்சர்லாந்தில் நான்கு மொழி கள் தேசிய மொழிகளாக அங்கீகரிக் கப்பட்டுள்ளன. ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி மற்றும் ரூமானிஷா மொழி.
சுவிட்சர்லாந்து நாட்டில் குடியு ரிமை பெற விரும்புவோர், இந்த நான்கு மொழிகளில் ஏதாவது ஒன்றி லாவது நல்ல மொழி அறிவோடு புலமை பெற்றிருக்க வேண்டும்.
சுவிட்சர்லாந்தில் 70 விழுக்காடு மக்கள் ஆங்கிலம் பேசுகின்றனர், இருப்பினும் அந்த ஆங்கிலப் புலமை, சுவிட்சர்லாந்து குடியுரிமை பெறுவதற்கு உதவாது.
பின்னீஸ், ருமானிஷா மற்றும் எல்லை மாகாணங்களில் பேசப்படும் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தா லிய மொழிகளில் ஒன்றை குடியுரிமை பெற தெரிந்திருக்கவேண்டும் என்ற விதி உள்ளது.
இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்தி பேசுகின்றனர். ஆகவே அதை அனைவரும் கற்கவேண்டும், என்கிறார் அமித்ஷா. தமிழ் திரைப் பட நடிகை ஒருவர் இந்தி பேசுப வர்கள் நல்லவர்கள் ‘நாமும் இந்தி கற்றுக்கொள்ளவேண்டும்' என் கிறார்.
ஒரு இந்தி திரைப்பட நடிகர் இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்கிறார்.
இவர்கள் சுவிட்சர்லாந்தைப் பார்த்து திருந்துவார்களா?
No comments:
Post a Comment